மிஷன் சக்ஸஸ்! வேலையை கச்சிதமாக தொடங்கிய ஆதித்யா விண்கலம்! இஸ்ரோவின் இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா!
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், கரோனல் மாஸ் எஜெக்ஷனை இக்கருவி கண்டறிந்து, அதை ஆய்வு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி துறையில் சந்திரயான் 3க்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன், ஆதித்யா எல்1 தான். இதற்கு முன்னர் இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய எந்த விண்கலமும் அனுப்பப்படவில்லை. ஆதித்யா எல்1 தான் முதல் விண்கலம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், சுமார் 127 நாட்கள் பயணித்து, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு சமீபத்தில்தான் நிலை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன. அதாவது, விண்கலத்தில் பாபா(PAPA) எனும் கருவி இணைக்கப்பட்டிருந்தது. இதன் வேலை, சூரியனிலிருந்து வெளிவரும் அதிக அளவு சூரிய துகள்களின் வெடிப்பை(கரோனல் மாஸ் எஜெக்ஷன்) கண்காணித்து அதை ஆய்வு செய்வதுதான். அந்த வகையில் தனது பணியை பாபா கருவி சிறப்பாக செய்திருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் சூரியனிலிருந்து அதிக அளவு சூரிய துகள்களின் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை இக்கருவி சரியாக கண்டுபிடித்திருக்கிறது. பாபா ஒரே கருவியாக இருந்தாலும், இதில் இரண்டு சென்சார்கள் இருக்கின்றன. இந்த சென்சார்கள் சூரியக் காற்றின் துகள்களின் அளவு மற்றும் அது எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை அளவிட பயன்படுகிறது.
சரி ஏன் இந்த அளவீடுகள் முக்கியம் என்கிற கேள்வி எழலாம். அதற்கும் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். அதாவது, சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள் செல்ஃபோன் தொடங்கி, டிவி, கம்ப்யூட்டர் என எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களையும் முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரானிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக பேரழிவு ஏற்படும்.

எனவே இந்த பேரழிவை முன்கூட்டியே கண்காணிக்க கரோனல் மாஸ் எஜெக்ஷனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த பணியைதான் இந்தியாவின் ஆதித்யா எல்1 வெகு சிறப்பாக செய்து வருகிறது என்று இஸ்ரோ தற்போது உறுதி செய்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மாதம் 25ம் தேதி, ஆதித்யா எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த மேக்னட்டோ மீட்டர் சிறப்பாக தனது செயல்பாடுகளை தொடங்கியிருந்தது. இது அண்டத்தின் காந்த புலத்தை அறிவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications