எம்பி தேர்தலில் போட்டியிட பிப்.4 முதல் விருப்ப மனு அளிக்கலாம்.. அதிமுக அறிவிப்பு
வரும் பிப்ரவரி 4 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில் பிரதான கட்சியான அதிமுகவும் இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 23ம் தேதியன்று, தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சார பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களையும் அறிவித்திருந்தது.

மூன்று குழுக்கள்
இதில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் 7 பேர், தொகுதி பங்கீட்டு குழுவில் 5 பேர், பரப்புரை பணிகளுக்கான குழுவில் 6 பேர் என இடம்பெற்று உள்ளனர்.

விருப்ப மனு
இந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தல் வேலையில் அதிமுக ஈடுபட்டுள்ளது. அதன்படி, மக்களவை தேர்தலில் போட்டியிட பிப்.4-ம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.

அதிமுக அறிவிப்பு
இது சம்பந்தமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் சொல்லி உள்ளதாவது:

விண்ணப்ப படிவங்கள்
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர், தலைமைக் கழகத்தில் வருகிற 4-2-2019 முதல் 10-2-2019 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணப்பக் கட்டண தொகையாக 25,000 ரூபாய் செலுத்தி, விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications