இனி ஒருத்தனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்.. செம்மலையிடம் குத்து வாங்கியவர் ஆவேசம்!
அதிமுக தொண்டனுக்கு பாதுகாப்பு இல்லை என தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: "பாமக கிட்ட சரண்டர் ஆயிட்டாங்க.. அதிமுக தொண்டனுக்கு பாதுகாப்பு இல்லை.. இனி ஒருத்தனும் வேலை செய்ய மாட்டான். அதிமுகவோட பவர் என்னன்னு இந்த தேர்தல்ல தெரியும்" என்று சொல்கிறார் செம்மலை எம்எல்ஏ தாக்கியதால் பாதிக்கப்பட்ட தங்கராஜ்!
தருமபுரி தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பகுதியில் அன்புமணி ராமதாஸ் ஓட்டு சேகரிக்கும்போது, திடீரென ஒரு அதிமுக தொண்டர் ஆவேசமாக வந்தார். அவர் பெயர் தங்கராஜ்.
"5 வருஷமா எங்கே போயிருந்தீங்க.. 8 வழிச்சாலைக்கு மக்கள் இங்க போராடிட்டு இருந்தாங்களே.. அப்போ எங்க போனீங்க" என்று கேள்வி கேட்டார். இதை தடுத்து பார்த்த செம்மலை எம்எல்ஏ, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, அந்த அதிமுக தொண்டரை கண்மூடித்தனமாக போட்டு தாக்கினார்.

வீடியோ வைரல்
இதை கொஞ்சமும் அன்புமணி எதிர்பார்க்கவே இல்லை. அதனால் மிகவும் குறைவாகவே பேசிவிட்டு உடனடியாக அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் செம்மலை தங்கராஜை அடித்த காட்சி வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கராஜ்
இதையடுத்து செம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக தொண்டர் தங்கராஜ் இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் சொன்னதாவது: "25 வருஷமா கட்சிக்காக உழைச்சேன்.. தமிழ்நாடு பூரா அதிமுக தொண்டனுக்கு பாதுகாப்பு இல்லை. அது அம்மாவோட போயிடுச்சு. இனிமே அதிமுகவோட பவர் என்னன்னு இந்த தேர்தல்ல தெரியும்.

யார்னு தெரியும்
இனிமே அதிமுக தொண்டன் ஒருத்தன்கூட வேலை செய்யமாட்டான். பாமககிட்ட சரண்டர் ஆயிட்டாங்க. அவங்களோடு சேர்ந்துகிட்டு தொண்டனை அடிக்கிறது.. முன்னே பின்னே பேசுறது.. இனிமே அதிமுக தொண்டன்னா யார்னு தெரியும்.

அதிருப்தி
இவ்வளவு காலம் உழைச்ச எனக்கே இந்த நிலைமைன்னா.. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இருக்கிறாங்க. தமிழ்நாடு முழுக்க அதிமுக தொண்டர்கள் அதிருப்திதான். அதிலும் இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டு போடற மாதிரி இல்லை.

ஓட்டு இல்லை
நான் கட்சியும் சேரல.. நான் ஒரு விவசாயி.. அதனால ராகுல்காந்தி பிரதமர் ஆகணும். அதனால அவருக்கு ஓட்டு. அதில மாற்றம் இல்லை. அதே மாதிரி அதனுடைய கூட்டணி கட்சிக்கும் ஓட்டு இல்லை" என்றார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications