Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியாக 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் ஆனார் பொன்முடி.. மறுபடியும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார் பொன்முடி. அவருக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகிறார் பொன்முடி.

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 2016ஆம் ஆண்டு பொன்முடி உள்ளிட்டோரை விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

After 3 months Ponmudi becomes the higher education minister again

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது.

பொன்முடி - ஆளுநர்: இந்நிலையில், ஐகோர்ட் விதித்த தீர்ப்பையும், தண்டனையையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்ததால் மீண்டும் எம்.எல்.ஏ பதவியைப் பெற்றார் பொன்முடி. இதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால், ஆளுநர் ரவி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார்.

கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், "பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.

இன்று பதவி ஏற்பு: பொன்முடிக்கு அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு. உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு காட்டமாக நேற்று தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் நாளைக்குள் (அதாவது, இன்றைக்குள்) ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில், இன்று பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி. ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

உயர்கல்வித்துறை: இந்நிலையில், அமைச்சராக பதவி ஏற்றுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பொன்முடி பதவியை இழந்ததால் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை, ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜகண்ணப்பன் வசம் இருந்த உயர்கல்வித்துறை திருப்பி பெறப்பட்டு அது மீண்டும் பொன்முடி வசம் ஒப்படைக்கப்படுகிறது.

கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றியவர் முனைவர் க.பொன்முடி. பின்னர், தீவிர அரசியலில் பணியாற்றத் தொடங்கினார். திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வந்த பொன்முடி, 1984ல் திமுகவில் இணைந்தார். 1989ல் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். முதல் முறை சட்டமன்ற உறுப்பினரானதுமே அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார் பொன்முடி. சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டார்.

After 3 months Ponmudi becomes the higher education minister again

அமைச்சர் பொன்முடி: அதன் பிறகு 1996ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, மீண்டும் அமைச்சரான பொன்முடிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு 2006ல் மீண்டும் கருணாநிதி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆனார் பொன்முடி. 2021ல் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆனார்.

நீதிமன்ற தீர்ப்பால் எம்.எல்.ஏ பதவியை இழந்ததால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் பொன்முடி. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவால் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மீண்டும் அவர் கவனித்து வந்த உயர்கல்வித்துறையை அவரிடமே வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, 3 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியுள்ளார் பொன்முடி. பொன்முடி மீண்டும் அமைச்சரானதையடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+