திமுகவை முந்திகிட்டு அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது ஏன்? எடப்பாடியை புஷ் செய்த அந்த முக்கிய நபர்
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே அதிமுக முதல்கட்டமாக அந்த 5 வாக்குறுதிகளை அளித்ததற்கு காரணம் அந்த நபர் அறிவுறுத்தியதுதான் என தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 17ஆம் தேதி எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக காலை 11 மணிக்கு அதிமுகவின் தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகைக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கூடினர்.

அப்போது எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி, திடீரென வரும் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய5 வாக்குறுதிகளை அறிவித்தார். அதில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ 2000, ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், 125 நாள் வேலை திட்டம் 150 ஆக உயர்வு, அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் 5 லட்சம் பெண்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் வழங்கப்படும், வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என 5 வாக்குறுதிகளை அளித்தார்.
திமுகவுக்கு முன்பே அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதற்கு ஒருவர்தான் காரணம். அதாவது கரி நாளில் நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுக கூட கரி நாள் பார்த்துதான் அறிவிப்புகளை வெளியிடும்.
ஆனால் கடவுள் பக்தியுடன் நெற்றி நிறைய விபூதி, குங்குமம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கரி நாளில் அவசரமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஜோதிடர்களின் ஆலோசனையின்படிதான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டாராம்.
கடந்த 17ஆம் தேதி சிவராத்திரி, சதுர்த்தி திதி. அதிலும் இது தேய்பிறை சதுர்த்தி திதி. இந்த திதியானது காளிக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் செய்யும் காரியம் தடைகளை நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியானது அதிக பலன்களை அள்ளித் தரும் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி கடந்த 17 ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது 11 மணிக்கு மேல்! அன்றைய தினம் 11 மணி முதல் 12 மணி வரை புதன் ஓரை! அதைத் தொடர்ந்து சந்திர ஓரையும் இருந்தது. இந்த இரு ஓரைகளுமே சுப ஓரைகள். அதனால்தான் ஜோதிடர் அறிவுரைப்படி புதன் ஓரையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல் 5-ஐ வெளியிட்டாராம்.
அது போல் அன்றைய தினம் பூராடம் நட்சத்திரம் ஆகும். பூராடம் வாழ்க்கை பூரா போராட்டம் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் என்கிறார்கள். பூராட நட்சத்திரத்தில் எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும் என்கிறார்கள்.
எனவே கடவுள் நம்பிக்கை கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஜோதிடரின் அறிவுரையின்படி இவ்வாறு முக்கிய தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிப்பும் நல்ல நாளில் வெளியிடுவதுதான் வழக்கம். இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம் -
ஆகா..ஒன்னு கூடிட்டாங்க! மகனுக்காக களத்துல ஐபி! கைகோர்த்த சக்கரபாணி! திக்கு தெரியாமல் திண்டுக்கல்லார் -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
தவெகவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ? நிலைமை என்ன ஆகும்? - சட்டசபையில் சமாளிப்பாரா விஜய்? -
சம்பந்திக்காக சேராத இடம் சேர்ந்து.. வஞ்சத்தில் வீழ்ந்த எடப்பாடி! வஞ்சகன் மோடி! முத்தரசன் அட்டாக்! -
பவன் பாதி.. ஜெகன் மீதி! அரசியலிலும் ரீமேக்கா? வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு? -
Vijayakanth: விஜயகாந்த்தை ஒரு கோமாளியாக பார்த்தாங்க! குளமான பிரேமலதாவின் கண்கள்! -
Vijay: சைக்கிள் ஓட்டியபோது ரசிகர் எறிந்த பூக்கள்! வெடிகுண்டுனு நெனச்சி கேரவனுக்குள் ஓடினாரா விஜய்? -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி?












Click it and Unblock the Notifications