Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குட் புக்கில் இருந்தவர்.. யார் இந்த அன்வர் ராஜா? எடப்பாடி மிஸ் பண்ணிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. யார் இந்த அன்வர் ராஜா? இவரின் முடிவு எப்படி அதிமுகவை பாதிக்கும்? திமுகவிற்கு எப்படி சாதகமாக அமையும்? என்று இங்கே பார்க்கலாம்.

அன்வர் ராஜா 2001ல் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தமிழக சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இவர் தமிழக அரசில் இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக 16ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2014 தேர்தலில் இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக பணியாற்றியவர் அன்வர் ராஜா.

Anwar Raja dmk

அன்வர் ராஜாவின் அரசியல் பயணம்: ஆரம்ப கட்டம் முதல் வளர்ச்சி வரை

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, 1986-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது திமுக ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதிமுகவுக்கு இது ஒரு சவாலாகவே இருந்தது. இருப்பினும், அன்வர் ராஜா தேர்தலில் வெற்றி பெற்றார்.

அன்வர் ராஜா, மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், எம்.ஜி.ஆர் அவரை உரையாற்ற அழைத்தார். மேலும், அதிமுகவின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவில் சேர்த்துக் கொண்டார். அந்தக் குழுவில் 13 பேர் அமைச்சர்களாக இருந்தனர், அன்வர் ராஜாவும், ஜெயலலிதாவும் அமைச்சர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர் அன்வர் ராஜா.

அன்வர் ராஜா இஸ்லாமிய முகம்

தென்மாவட்டங்களில் அதிமுகவின் இஸ்லாமிய முகம்களில் முக்கியமானவராக இருந்தவர் அன்வர் ராஜா. அன்வர் ராஜா இஸ்லாமியர்கள் இடையே அரசியல் கடந்தும் கூட பெரிய மதிப்பையும் பெற்று இருந்தார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் இவர் கடுமையாக எதிர்த்து வந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, அன்வர் ராஜா ஜானகி எம்.ஜி.ஆரின் பக்கம் சென்றார். 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜானகியின் அணியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு, ஜெயலலிதாவின் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர், கட்சியின் வெற்றிகளைப் பொருட்படுத்தாமல் அவர் கட்சியில் உறுதியாக இருந்தார். அதன்பின் கடைசி வரை ஜெயலலிதா குட் புக்கில் இருந்தார்.

அதிமுக மீது இஸ்லாமியர்கள் அப்செட்

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அன்வர் ராஜா, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், சசிகலாவுக்கு ஆதரவு என்றும் சமீபத்தில் தெரிவித்தார். எடப்பாடியை விமர்சனம் செய்யும் விதமாக சசிகலாவிற்கு ஆதரவாக பேசினார். எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் வைத்ததையடுத்து, 2021-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 2023ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் இப்போது மீண்டும் அதிமுகவின் பாஜக கூட்டணியை எதிர்த்து திமுகவில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா.

எடப்பாடி சாரி எல்லாம் கேட்டார்

சமீபத்தில் கூட பாங்கு ஓதும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு இஸ்லாமியர்களை இம்ப்ரஸ் செய்ய நினைத்தார். சாரி தெரியாமல் பேசி விட்டேன் என்றெல்லாம் எடப்பாடி கூறினார். அப்படி இம்ப்ரஸ் செய்ய நினைத்த எடப்பாடி டிப்ரஸ் ஆகும் வகையில்.. அன்வர் ராஜா திமுக பக்கம் சென்றுள்ளார். இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது.

முக்குலத்தோர் + முஸ்லீம் வாக்குகள்

ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா உடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மோதல் காரணமாக முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைப்பது இல்லை. அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்து தென் மண்டலத்தில் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது.

இப்போது இஸ்லாமியர்கள் வாக்குகளும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் தென் மண்டலத்தில் அதிமுக அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் அன்வர் ராஜாவின் முடிவு அதிமுகவிற்கு மேலும் சரிவை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+