Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம்.. எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மரியாதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், விகே சசிகலா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் ஜெயலலிதா. உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

AIADMK cadres led by party leader Edappadi K Palaniswami pay respects to jeyalalitha

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஜெயலலிதா நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இதில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் உடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். சினிமாவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா, அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1989 சட்ட சபை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ வாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

அத்துடன், தமிழக சட்டப் சபையில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். இதையடுத்து, 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறை முதல்வராக பதவியேற்றார். பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி தோல்வி என மாறி மாறி சந்தித்த ஜெயலிதா, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வரானார். 6வது முறை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் ஜெயலலிதா.

AIADMK cadres led by party leader Edappadi K Palaniswami pay respects to jeyalalitha

உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இன்றைய நாளில் ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

AIADMK cadres led by party leader Edappadi K Palaniswami pay respects to jeyalalitha

இதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் அவரது உருவப்படமும் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி போட்ட ட்விட் பதிவில், "எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை, நம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்து, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

மாண்புமிகு இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (05.12.23) மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்.

AIADMK cadres led by party leader Edappadi K Palaniswami pay respects to jeyalalitha

அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி, மக்களுக்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி, மக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம். என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நினைவுநாள் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.

AIADMK cadres led by party leader Edappadi K Palaniswami pay respects to jeyalalitha

இதேபோல் டிடிவி தினகரனும், வி.கே சசிகலாவும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அதிமுக ஆதரவாளர்கள் பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக டிடிவி வெளியிட்ட ட்விட் பதிவில், "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" எனும் தாரக மந்திரத்தை தன் வாழ்க்கையாக கொண்டு நாடு போற்றும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

அடக்குமுறைகள் ஆயிரம் வழியில் வந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்ட அம்மா அவர்களின் வழியில் பயணித்து அவரின் லட்சியங்களை மீட்டெடுப்பதோடு, தீய சக்தியையும், துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்ற அம்மா அவர்களின் நினைவுநாளில் உறுதியேற்போம். என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+