எடப்பாடி மீட்டிங்.. எஸ்கேப்பான 6 எம்எல்ஏக்கள்! பாண்டிச்சேரியில் பரபரப்பு! உச்சகட்ட டென்ஷனில் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் குதிரை பேரம் நடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஆறு முக்கிய எம்எல்ஏக்கள் மாயமானது எடப்பாடி தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவர்கள் எங்கு சென்றார்கள்? என்பது குறித்த தகவல்களும் தற்போது வெளிவந்திருக்கின்றன.

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 சட்டசபை தேர்தல் நடைபெற்ற முடிவடைந்திருக்கிறது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஆரம்பத்தில் இருந்தே தவெக தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளான திமுகவுக்கும் அதிமுகவுக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

Edappadi Palaniswami AIADMK TVK Vijay

70-களுக்கு மேல் வெற்றி பெற்று இருக்கும் என கணிக்கப்பட்ட திமுக இரண்டாம் இடத்திற்கும், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தகவல்களின்படி 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கலகம் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தவெக ஆட்சி

திமுக கூட்டணி 70-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அதிமுக கூட்டணி ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகி உள்ள நிலையில் தொங்கு சட்டசபைக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முயன்று வருகிறார்.

தனிப் பெரும்பான்மை

ஆனால் தனிப் பெரும்பான்மை இல்லை எனக் கூறி கூட்டணி கட்சிகளில் இருக்கும் 118 எம்எல்ஏக்களின் விவரங்களை தந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதை அடுத்து விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றி கழகத்துடன் தொடர்பு இருப்பதாக கூறியது.

அதிமுக

இதை அடுத்து 30க்கும் மேற்பட்ட எம்எல் ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டின் பேரில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதிமுக திமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம் என தகவல் வெளியான நிலையில் தம்பிதுரை உள்ளிட்ட சில தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்றனர்.

அதிமுக திமுக கூட்டணி

இந்த நிலையில் அதிமுக திமுக கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் எப்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது இந்த நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நேற்றைய கூட்டத்தில் சிவி சண்முகம் மரகதம் குமாரவேல் உள்ளிட்ட ஆறு எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவி சண்முகம்

ஏற்கனவே சிவி சண்முகம் விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என போர்க்கொடி தூக்கிய நிலையில் எஸ்.பி வேலுமணியும் அவரோடு சேர்ந்து கொண்டார். அவர்களை அழைத்து எடப்பாடி பழனிச்சாமி சமாதானம் செய்தார். இந்த நிலையில் சிவி சண்முகம் எடப்பாடியின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காக டெல்லி சென்றிருந்தார். மரகதம் குமாரவேல் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலே இருப்பதால் கூட்டத்திற்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கூட்டத்தை புறக்கணித்த மற்ற எம்எல்ஏக்கள் யார்? அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற தகவல்களை அதிமுகவினர் சொல்ல மறுத்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+