இதெல்லாம் ரொம்ப தப்புங்க.. அம்மா உணவகத்தில் அரசு பள்ளி! எச்சரிக்கை விடுக்கும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: சென்னை ஆலந்தூரில் அம்மா உணவகம் செயல்படாமல் அதில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிட வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கூலித் தொழிலாளிகள், ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் பசியாறும் வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து மாநகராட்சி பகுதிகளிலும், அடுத்த கட்டமாக நகராட்சி என தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும் ., சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் , சப்பாத்தி, பொங்கல், கலவை சாதம் உள்ளிட்டவை மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் உணவருந்தினர்.
கடந்த 2021ஆம் வருடம் திமுக ஆட்சி அமைந்த நிலையில் ஏழை எளியோரின் பசியை போக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதாக அதிமுகவினர் புகார் கூறிய நிலையில், அம்மா உணவகம் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலினால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் கிடக்கிறது எனவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரது ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை குறிப்பாக அம்மா உணவகத்தை மூட முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து அம்மா உணவகம் மீண்டும் பழைய பொழிவோடு செயல்பட்டு வரும் என அரசு கூறியது. ஆனால் அம்மா உணவகங்களை முடக்க திமுக சதி செய்வதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை ஆலந்தூரில் அம்மா உணவகம் செயல்படாமல் அதில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"அம்மா அரசால் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு. தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறோம்.

இந்நிலையில், இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வருகிறார்.
வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின்,
உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications