உருட்டுவது பூனை குணம்.. கெடுப்பது குரங்கு குணம்.. ஓபிஎஸ்- டிடிவி சந்திப்பு குறித்து ஜெயக்குமார்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பிரச்சினை எழுந்துள்ளதால் இரட்டை தலைமைகளாக இருந்த ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பிரிந்துள்ளார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியிலிருந்து நீக்கி அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் தேர்வை ரத்து செய்ய கோரியும் அதிமுக பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரியும் நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடினார். ஆயினும் பெரும்பாலான தீர்ப்புகள் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வரவில்லை.
அதிமுக அலுவலக சாவி முதல் அதிமுக பொதுச் செயலாளர் பதவி வரை அனைத்துமே எடப்பாடி பழனிசாமிக்கு தோதுவாகவே நடந்துள்ளது. இந்த நிலையில் எல்லாம் கைமீறி சென்ற நிலையில் இனி மக்கள் மன்றத்தை நாட போவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திருச்சியில் நடத்திய மாநாடு பெரிய அளவில் நடந்தது.
ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0 நடத்திய போதே அவர் இறுதியில் சசிகலா, தினகரனுடன் இணைவார் என சொல்லப்பட்டது. அந்த வகையில் நிராயுதபாணியாக இருக்கும் ஓபிஎஸ் நேற்றைய தினம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்தார். அவருடன் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். ஓபிஎஸ்ஸை டிடிவி தினகரன் வாசல் வரை வந்து வரவேற்றார்.

அப்போது சசிகலாவை சந்திக்க முயற்சித்ததாகவும் அவர் வெளியூரில் இருப்பதால் அவர் சென்னை வந்ததும் அவரை சந்திப்பேன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஓபிஎஸ் டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிடிவி தினகரன் கூறுகையில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும், லட்சியத்தை அடைவதற்காக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஓபிஎஸ் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட அன்பு உண்டு. ஓபிஸ்ஸை நம்பி கையைபிடித்துக் கொண்டு இருட்டில் கூட செல்லலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்பி செல்ல முடியுமா? சிபிஎம்(மார்க்சிஸ்ட்), சிபிஐ (கம்யூனிஸ்ட்) போல் இரு கட்சிகளும் செயல்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதை பார்க்கும்போது தலைவரின் பாடலே நினைவில் வருகிறது. அன்றே கூறினார் புரட்சிதலைவர்! உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைகுணம்!
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையே கெடுப்பதுவும் குரங்குகுணம்! ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாற்றல் முதலைகுணம்! ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா! இவ்வாறு முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் கூறிய இந்த பாடல் சக்ரவர்த்தி திருமகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
டிடிவி தினகரன்- ஓபிஎஸ் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் ஓபிஎஸ் காலாவதியான மருந்து. க3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் இன்று பதவிக்காக அடைக்கலம் தேடி சென்றிருக்கிறார். குடும்ப நலனுக்காக யாரை வேண்டுமானாலும் அவர் சந்திப்பார் என விமர்சித்துள்ளார். இன்றைய தினம் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த போது ஆர்.பி. உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்றார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications