அதிமுக பொதுக்குழு கூட்டம்.. வானகரத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு.. குவியும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் - வீடியோ
சென்னை: அதிமுக பொதுக்குழு : வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு இடையில் காலை 6 மணியில் இருந்தே தொண்டர்கள் பொதுக்குழு நடக்கும் இடத்தில் கூடி வருகிறார்கள்.
Recommended Video
பெரும் போராட்டம்.. பரபரப்பு.. மோதல்.. சட்ட போராட்டங்களுக்கு இடையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட நேற்று உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முதலில் பொதுக்குழு முடிவில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் மேல்முறையீட்டில் பொதுக்குழு நடத்தலாம், ஆனால் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பொதுக்குழு
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடக்க உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட முடியாது. அதிமுக பொதுக்குழு : வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

பாதுகாப்பு அதிகரிப்பு
மண்டபத்திற்கு உள்ளே, வெளியே, இணைப்பு சாலைகளில் மொத்தம் 2000 போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். மண்டபம் நோக்கி அதிமுக நிர்வாகிகள் குவிந்து வருகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மண்டபம் உள்ளே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க ஆவலுடன் வரும் தொண்டர்கள் ஸ்ரீவாரி மண்டபம் முன்பு குவிந்து வருகின்றனர்.

எம்ஜிஆர்
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்று வேடமணிந்து நிர்வாகிகள் கொண்டாடி வருகிறார்கள். ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அதிக அளவில் மண்டபத்தில் குவிந்து வருகிறார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வீடு முன் நிர்வாகிகள் ஏராளமானோர் கூடி கொண்டாடி வருகிறார்கள். ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்க நிர்வாகிகள் அதிக அளவில் கூடி உள்ளனர்.

போஸ்டர்கள், கட் அவுட்கள்
இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் விழா நடக்கும் மண்டபம் அருகே ஒட்டப்பட்டுள்ளது. இரண்டு தரப்பிற்கும் ஆதரவாக பிரம்மாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டு உள்ளன. பறை, மேளம், செண்டை, கரகம் என்று பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நிர்வாகிகள் வரவேற்கப்பட்டு வருகின்றனர். சுமார் 2565 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2500 பேர் வரை கண்டிப்பாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . காலை 6 மணியில் இருந்தே தொண்டர்கள் பொதுக்குழு நடக்கும் இடத்தில் கூடி வருகிறார்கள்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications