Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மார்ட்டினினின் மனைவி லீமா ரோஸிடம் விற்றுவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சரும், லால்குடி சட்டசபை தொகுதி தவெக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், அதிமுக சார்பில் லீமா ரோஸ் மார்ட்டின், தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

AIADMK Handed Over to Leema Rose TVK KP Krishnan s Serious Charge Against EPS

லால்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "போட்டி திமுக - அதிமுகவிற்கு இடையில் தான் உள்ளதா?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். "தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி. திமுகவைத் தவிர எங்களுக்கு போட்டி எவரும் இல்லை. நாங்கள் தான் வெற்றி வேட்பாளர். திமுக பின்னால் இருந்து கொண்டிருக்கிறது. பிரகாசமான, ஒளிமயமான வெற்றியை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் மார்ட்டின் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கு.ப.கிருஷ்ணன், "மரியாதைக்குரிய அந்த அக்காவிற்கும் லால்குடிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வெங்காயத்தை எடுத்து உலர்த்தி விற்பதாக இருந்தால் எத்தனை நாட்களுக்கு அவர்கள் வைத்திருக்க முடியும்? ஒரு நாள் மழை பெய்தாலே அனைத்தும் போய்விடும். இது ஒரு அழுகும் பொருள். ஒரு விவசாயி என்ற முறையில் எனக்குத் தெரியும். லால்குடியில் நெல், கரும்பு, வாழை தான் இருக்கிறது. அந்த அக்காவிற்கு எத்தனை ரக நெல் இருக்கிறது என்று தெரியுமா? எப்போது விதைக்க வேண்டும் என்று தெரியுமா? ஒரு ஏக்கருக்கு விதைகள் எவ்வளவு விதைக்க வேண்டும் என்று தெரியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி அதிமுகவை லீமா ரோஸ் மார்ட்டினிடம் விற்றுவிட்டார். அவர் மீது ஒரு வழக்கு, இரண்டு வழக்கு அல்ல. அவர் மீது வழக்கு போடாத மாநிலமே கிடையாது. எல்லா மாநிலங்களிலும் வழக்கு போட்டு இருக்கிறார்கள். எடப்பாடிக்கு ஒன்றே ஒன்றை கேட்கிறேன். நாங்கள் எல்லோரும் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான்.

இந்தியா முழுவதும் தம்முடைய லாட்டரி சீட் ஆதிக்கத்தை நடத்திய மார்ட்டினை இந்தியாவிலேயே கைது செய்து சிறையில் போட்டவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிடக் கூடாது. லாட்டரி சீட்டை தமிழ்நாட்டில் தடை செய்தார்கள். அப்படிப்பட்ட அந்த நபருடைய மனைவியை அதிமுக வேட்பாளராக போட்டிருக்கிறார் என்று சொன்னால், உண்மையிலேயே அவருக்கு அதிமுக மீது பற்று இருக்கிறதா? அம்மாவின் மீது பாசம் இருக்கிறதா?

எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை பார்த்ததே கிடையாது. அது எங்களுக்கு தெரியும். இவர் 91க்குப் பிறகு தான் வந்தார். ஆனால் அவர் 'நான் முன்னாடியே வந்துவிட்டேன்' என்று கணக்கு சொல்லுவார். சேவல் என்பது 88இல் இருந்தது. நாங்கள் எல்லோரும் பச்சை குத்தியவர்கள். நாங்கள் எல்லாம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள். ஜெயலலிதா தான் மார்ட்டினை கைது செய்து சிறையில் அடைத்தார்.

அந்த மார்ட்டினுடைய மனைவியை அதிமுக வேட்பாளராக இவர் போட்டியிட வைத்திருக்கிறார் என்று சொன்னால், அதிமுக இருக்கிறதா அல்லது விற்கப்பட்டுவிட்டதா என்பது உங்களுக்கே தெரியும். மார்ட்டின் மனைவிக்கு தேர்தலில் அதிமுகவில் சீட்டு வழங்கி மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வர எடப்பாடி முயற்சிக்கிறாரா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

லீமா ரோஸ் மார்ட்டின், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார பிரிவு மேலாண்மைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார். லீமா ரோஸ் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கி புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+