இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது! காங்கிரசை தூக்க பிளான் போட்ட எடப்பாடி! நேரம் பார்த்து.. கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு திமுகவிடம் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. ஏற்கனவே வென்ற 9 தொகுதிகள் + 3 தொகுதிகள் என்று கூடுதலாக காங்கிரஸ் கேட்டுள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

AIADMK is indirectly trying hard to take Congress into alliance from DMK for Lok Sabha 2024

1. திருவள்ளூர் (SC)
2. கிருஷ்ணகிரி
3. ஆரணி
4. கரூர்
5. திருச்சிராப்பள்ளி
6. சிவகங்கை.
7. தேனி:
8. விருதுநகர்:
9. கன்னியாகுமரி

இது போக

1. திருநெல்வேலி
2. ராமநாதபுரம்
3. தென்காசி (SC)
4. திண்டுக்கல்
5. திருவண்ணாமலை
6. தஞ்சாவூர்
7. மயிலாடுதுறை

இதில் குறைந்தது 3 தொகுதிகள் என்று 12 தொகுதிகளை மொத்தமாக வழங்க வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கேட்டு வருகிறதாம்.

திமுக பிளான் என்ன?: ஆனால் திமுக காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை கொடுக்க திட்டமிட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு கடந்த முறை போல 10 இடங்களை கொடுக்காமல் 7 இடங்களுக்குள் சுருக்கும் முடிவில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் சமீபத்தில் காங்கிரசின் தோல்வி.. திமுகவிற்கு கூட்டணி ரீதியாக அதிக பவரை கொடுத்துள்ளதாம்.

லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 7- 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பிளான்: இந்த நிலையில்தான் திமுகவின் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம். இதைவிட பெரிய சான்ஸ் கிடைக்காது.. காங்கிரசை அதிமுக பக்கம் கொண்டு வாருங்கள் என்று அதிமுக தலைகளிடம் எடப்பாடி பேசி இருக்கிறாராம்.

அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை பிரித்து.. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்க எடப்பாடி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசை இழுக்க திட்டம்: கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.

இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை உள்ளே இழுக்கவும் எடப்பாடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

கூட்டணியில் குழப்பம்: இந்த நிலையில்தான் திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்று கையில் எடுத்துள்ளாராம். இதற்காக ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டத்தை எடப்பாடி கையில் எடுத்து இருக்கிறாராம்.

மோதல்: சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் முதல்வர் வேட்பாளர் என்று போஸ்டர் ஒட்டியது, இணையத்தில் கார்த்தி சிதம்பரம் - உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே கூட இதனால் மோதல் ஏற்பட்டது. இணையத்தில் இவர்களுக்கு இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது.

சமீபத்தில், மாவீரர் தினத்தை முன்னிட்டு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்ட வீடியோவிற்கு கார்த்தி சிதம்பரம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தார். மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்தனர். இதெல்லாம் காங்கிரஸ் - திமுக இடையே பிளவை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டுள்ளதால்.. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பெரிய விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைத்து அதிமுக - காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

வைகை செல்வன்: நேற்று கூட எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு வைகைச் செல்வன் அளித்த பேட்டியில், திமுக உடனான காங்கிரஸின் கூட்டணி கசப்பிற்கு அதிமுகவிடம் மருந்து உள்ளதாக, நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேட்டி அளித்தார். வைகைச்செல்வன் அளித்த பதிலால், அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? காங்கிரசை உள்ளே இழுக்க அதிமுக முயல்கிறதோ என கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+