Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக தந்த அந்த "டிப்-ஆப்"..பொன்முடி, செந்தில் பாலாஜி சிக்க இதுதான் காரணம்! சீக்ரெட்டை சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து ரெய்டுகளில் சிக்க, கைதாக காரணமே அதிமுக லீகல் விங் கொடுக்கும் டிப் ஆப் தான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

AIADMK legal wing tip off is the reason behind Minister Senthil Balaji and Ponmudi case verdict?

தண்டனை: இன்று பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார். பொன்முடி வழக்கு ஆளும் திமுகவை கிட்டத்தட்ட புரட்டி போட்டுள்ளது. ஏனென்றால் திமுகவில் முதல்முறையாக ஆட்சியில் இருக்கும் போது சிறை செல்லும் அமைச்சர் இவர்தான். அதேபோல் திமுகவில் ஒருவர் குற்றம் செய்ததாக தண்டிக்கப்படுவதும் இதுதான் முதல் முறை.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் ஆனந்த் வெங்கடேசன் சுய மோட்டோ கேஸ் போட்டதுதான் இப்போது இந்த தீர்ப்பு வர காரணம். இதை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மற்ற அமைச்சர்கள் வழக்குகளில் விடுதலை ஆனதும் கூட சிக்கல் ஆகி உள்ளது. நீதி அரசர் ஆனந்த் வெங்கடேசன் விமர்சனம் செய்யப்பட்டு 1 பக்கத்திற்கு கட்டுரை முரசொலியில் எழுதப்பட்டது. இது எல்லாமே சிக்கலாகிவிட்டது,

அதோடு இல்லாமல் .. 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த மேல்முறையீடு வாதங்களை இவர்கள் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை தற்போது நீதிபதி ஜெயசந்திரன் கூறியுள்ளார். நீதி அரசர் ஆனந்த் வெங்கடேசன் திமுக அமைச்சர்கள் வழக்கை மட்டும் எடுக்கவில்லை. அதிமுக மாஜிக்கள் அமைச்சர்கள் வழக்கையும் எடுத்துள்ளனர்.

டிப் ஆப்: தற்போது வந்துள்ள தீர்ப்பு அதிமுகவிற்கு நல்ல டூல். அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நல்ல வாய்ப்பு. அதிமுக லீகல், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்த வழக்குகளை உன்னிப்பாக பாலோ செய்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவில் ஒரு லீகல் டீம் இதற்கு என்று உருவாக்கப்பட்டு திமுகவின் டாப் தலைவர்கள் மீதான வழக்குகள் ஆராய செய்யப்பட்டு வருகிறது.

அதை வெளியே கொண்டு வரும் பணிகளை அதிமுக செய்து வருகிறது. செந்தில் பாலாஜி வழக்கில் சட்ட ரீதியாக நெருக்கடி முற்ற காரணம் அதிமுக, பாஜகவும்தான். அதிமுக லீகல், பாஜக தலைவர் அண்ணாமலைதான் இதற்கான காரணம். சில வருமான வரித்துறை தகவல்கள் கூட.. பாஜக, அதிமுக கொடுத்த டிப் ஆப்தான் காரணம் என்கிறார்கள். வருமான வரித்துறைக்கு சில தகவல்களை கொடுப்பதே இந்த அதிமுக, பாஜக தலைகள்தான். ஆம்.. செந்தில் பாலாஜி அத்தனை இடங்களில் ரெய்டில் சிக்க அந்த டிப் ஆப்தான் காரணம்.

திமுகவிற்கு இது பெரிய நெருக்கடிதான். பதவியில் இருக்கும் அமைச்சர் நீக்கப்படுவது நெருக்கடிதான். செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பதும் நெருக்கடிதான். அவர் பதவியில் நீடிப்பதுதான் இன்னும் பிரச்சனை. அதனால்தான் அவருக்கு இன்னும் பெயில் கிடைக்கவில்லை. இது தெரிந்தும் அவரை ஸ்டாலின் நீக்கவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை, என்று பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+