சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு எதிராக அதிமுகவில் தொடரும் கலகக் குரல்.. செய்யாறு எம்.எல்.ஏ.வும் ஆவேசம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் சண்முகத்தை தொடந்து இன்னும் 2 பேர் போர்க்கொடி

    சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டுவச்சதே காரணம் என செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் ஆகியோர் குற்றம்சாட்டின உள்ளனர். கூட்டணி கட்சிகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் அதிமுக ஒரே ஒரு லோக்சபா தொகுயில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோல் 22 சட்டமன்ற தொகுதிகளில் 9 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    aiadmk mla and ministers again speech against bjp over aiadmk big defeat in lok sabha election

    இதனால் அதிமுக நிர்வாகிகள் கடும் வருத்தத்தில் இருக்கின்றனர். அதிமுக தோல்வி அடைந்ததுக்கு பாஜகவுடன் கூட்டு வைத்ததே காரணம் என அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டி இருந்தார். இப்போது மேலும் இரண்டு பேர் குற்றம்சாட்டி உள்ளார்கள்.

    விளாத்திகுளத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செல்லபாண்டியன் பேசுகையில், தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுக தோற்றுப்போனது என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். தனித்து நின்றிருந்தால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.

    அதிமுக தலைமைக்கு ரஜினிகாந்த்? ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி! அதிமுக தலைமைக்கு ரஜினிகாந்த்? ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி!

    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செய்யாறு ஒன்றியம் மற்றும் நகர அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா செய்யாறில் நேற்று நடந்தது. அப்போது மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசுகையில், நடந்து முடிந்த மக்களவை தேர்லில் அனைவரும் நன்றாக உழைத்தீர்கள். நமது மாவட்டத்தை பொறுத்த வரையில் யாரும் ஏமாற்றாமல் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு உழைத்தீர்கள் என்பது எனக்கு தெரியும். கடந்த மக்களவை தேர்தலில், தேர்தல் நாளன்று கிட்டத்தட்ட 110 பூத்களில் பார்வையிட்டேன். நமது கட்சி நிர்வாகிகளை தவிர கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் யாரையும் பார்க்க முடியவில்லை. கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்காததே ஆரணி மக்களவை தொகுதி தோல்விக்கு காரணம்" என்றார்.

    English summary
    aiadmk mla thusi mohan, and ex minister sellapandian, again speech against bjp over aiadmk big defeat in lok sabha election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X