Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபாசம், அசிங்கம்".. தொக்காக திமுகவினர் லிஸ்ட் எடுத்த ஓபிஎஸ்.. நெளியும் ஆளும் கட்சி

திமுக பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூடி வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகர் இளம் பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு செய்தது முதல், திருமங்கலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை திமுக பிரமுகர்களின் பங்கு நிறைய உள்ளதாக லிஸ்ட் போட்டு குற்றஞ்சாட்டி உள்ளார் ஓபிஎஸ்.. இது திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுக தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.. குறிப்பாக, திமுக மீது ஊழல் புகார்களை எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளை ஓபிஎஸ்ஸும் விடாமல் சொல்லி வருகிறார்கள்.

இருவருமே அவரவர் விஷயங்களில் இதுவரை உறுதியாக உள்ளனர்.. அந்த வகையில், ஓபிஎஸ், இன்றும்கூட திமுகவின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விஎழுப்பி மறுபடியும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது திமுக தரப்பில் எரிச்சலை கூட்டி வருகிறது.. அந்த அறிக்கை இதுதான்:

 அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா

"நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்." என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா. போறிஞர் அண்ணா அவர்களின் கூற்றிற்கு மாறான நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது. 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற சூழ்நிலை மாறி, 'அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மை' என்ற சூழல் கடந்த பதினோறு மாதங்களாக நிலவி வருகிறது.

ரவுடிகள்

ரவுடிகள்

காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி, ரவுடிகளை கண்டு காவல் துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதிலிருந்து பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், கொள்ளைகளும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அரசு அதிகாரிகளும், சிறு தொழிலதிபர்களும், வியாபாரிகளும், இன்னும் சொல்லப்போனால், காவல் துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

 பாலியல் தொந்தரவு

பாலியல் தொந்தரவு

பல நிகழ்வுகளில் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. விருதுநகர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு செய்ததில் உள்ளூர் தி.மு.க.வினருக்கு பங்கு இருக்கிறது என்பதை உதாரணமாகச் சொல்லலாம். இதேபோன்று, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தி.மு.க. பிரமுகர். பின்னர் அந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், அந்த தி.மு.க. பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

 அராஜக செயல்கள்

அராஜக செயல்கள்

இவையெல்லாம் ஆளுங் கட்சியினரால் ஏற்படும் அராஜகச் செயல்களுக்கு எடுத்துக்காட்டுகள் என கூறியுள்ளார். இதேபோல், மணல் கடத்தல், சாலை போடுதல் போன்ற பணிகளிலும் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. ரவுடிகளின் அட்டகாசம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டு இருக்கிறார்.

 கஞ்சா விற்பனை

கஞ்சா விற்பனை

அண்மையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதையும், இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருவதையும் அறிந்த காவல் துறையினர், அந்த இடத்திற்குச் சென்று அதனை தடுக்க முயன்றபோது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அதில் காவலர்கள் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல் துறையினரையே தாக்கும் அளவுக்கு ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.

திமுக பிரமுகர்

திமுக பிரமுகர்

இந்தச் சூழ்நிலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சென்னை நகரின் பிரதானப் பகுதியான பாரிமுனையில் பட்டப் பகலில் தி.மு.க. பிரமுகர் திரு. சவுந்தரராஜனை மர்மக் கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், குறு,சிறு தொழிலதிபர்கள், வியாபாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இன்னும் சொல்லப் போனால் பாதுகாப்பினை வழங்கக் கூடிய காவல் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஓர் அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர்.

 பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

மொத்தத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதற்குக் காரணம் சமூக விரோதிகளின் பயமின்மையை காட்டுவதாக கூறியுள்ளார். பொது அமைதி இல்லை என்றால் தொழில் வளம் இருக்காது, தொழில் வளம் இல்லை என்றால் பொருளாதார வளர்ச்சி இருக்காது, பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால் வேலைவாய்ப்புகள் பொருளாதார இருக்காது. வேலைவாய்ப்புகள் இல்லையென்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும்.

 கெடுசூழல்

கெடுசூழல்

இது ஒரு கெடுசூழல். எனவே பொது அமைதியை உருவாக்க வேண்டிய கடமை, சட்டம்-ஒழுங்கை சீராக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு, மாண்புமிகு முதலமைச்சருக்கு நிச்சயம் உண்டு. சுகாதாரம், செல்வ வளம், விளைபொருளின் வளம், இன்ப வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஓடுக்கி. அமைதியை நிலை நாட்டி, அதன்மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+