யார் அந்த சார்? எடப்பாடி திட்டமிட்டிருந்த போராட்டத்தை.. இருட்டடிப்பு செய்த ஆளுநரின் வெளிநடப்பு!
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக திட்டமிட்டிருந்த போராட்டத்தை.. ஆளுநர் ரவியின் வெளிநடப்பு இருட்டடிப்பு செய்துள்ளது. அதிமுக அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையை எழுப்ப நினைத்த நிலையில்.. ஆளுநர் ரவி விவகாரம் கவனம் பெற்று.. அதிமுகவின் போராட்டம் கவனம் பெறாமல் போய் விட்டது.
தமிழ்நாடு சட்டசபைக்கு இன்று அதிமுகவினர் யார் அந்த sir? என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரத்தை சட்டசபையில் எழுப்பும் விதமாக அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். ஏற்கனவே சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த Sir? என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது... கடந்த 1 வாரமாக இந்த பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்.. யார் அந்த சார்? என்று கேட்டு அதிமுக சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டு உள்ளது.

கிட்டத்தட்ட அதிமுகவை இந்த பிரச்சாரம் தூக்கத்தில் இருந்து எழுப்பி உள்ளது. உறங்கிக்கிடந்த அதிமுக தொண்டர்கள் திமிறி எழுந்துள்ளன. அதிமுகவை லைம் லைட்டிற்கு கொண்டு வந்த இந்த பிரச்சாரத்திற்கு பின்னணியில் இருப்பது வேறு யாரும் இல்லை.. அது பிரஷாந்த் கிஷோர் என்று கூறப்படுகிறது.
அவர் தந்த ஐடியாவின் அடிப்படையிலேயே அதிமுகவின் இந்த போஸ்டர் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது. யார் அந்த Sir? என்ற போஸ்டர் கண்டிப்பாக மக்களிடம் சென்று சேரும் என்று அவர்தான் ஐடியா தந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை முன்னிட்டே இன்றும் சட்டசபையில் அந்த பிரச்சனையை எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.
ஆளுநரின் செயல்பாடு:
ஆனால் இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக திட்டமிட்டிருந்த போராட்டத்தை.. ஆளுநர் ரவியின் வெளிநடப்பு இருட்டடிப்பு செய்துள்ளது. அதிமுக அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையை எழுப்ப நினைத்த நிலையில்.. ஆளுநர் ரவி விவகாரம் கவனம் பெற்று.. அதிமுகவின் போராட்டம் கவனம் பெறாமல் போய் விட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி... இன்று தொடங்கிய 2025 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். தனது வேண்டுகோளின்படி, தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குறிப்பிட்டு அவர் வெளிநடப்பு செய்துள்ளார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், நிறைவில் தேசியகீதமும் இசைப்பதுதானே தமிழ்நாட்டு சட்டமன்ற மரபு
ஆனால் இதை மாற்ற ஆளுநர் ரவி கோரிக்கை விடுத்து வருகிறார். சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் கூறி அவையில் இருந்தே வெளியேறினார். ஆளுநர் ரவி இந்த கோரிக்கையை வைத்த போது அதை எதிர்த்து சில எம்எல்ஏக்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட சலசலப்பும் ஆளுநர் ரவி வெளியேற காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக திட்டமிட்டிருந்த போராட்டத்தை.. ஆளுநர் ரவியின் வெளிநடப்பு இருட்டடிப்பு செய்துள்ளது. அதிமுக போராட்டம் கவனம் பெறாமல் ஆளுநரின் செயல் சட்டசபையில் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications