கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக ஓபிஎஸ்ஸை பிரச்சாரத்திற்கு அழைப்பீர்களா? அதிமுக அவைத் தலைவர் பதில் என்ன?
கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? அவைத் தலைவர் பதில் என்ன?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பும் இபிஎஸ் தரப்பும் ஒவ்வொரு வேட்பாளரை நிறுத்தியதால் பெரும் குழப்பம் நேரிட்டது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதில் பொதுக் குழு உறுப்பினர்களளிடம் ஒப்புதல் வாங்கி வேட்பாளரை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்டது.

அவைத் தலைவர்
அதன் அடிப்படையில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அதிமுக பொதுக் குழு உறுப்பினர்களுக்கு படிவங்களை அனுப்பி வைத்தார். அதில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்குள் கையெழுத்திட்டு படிவங்களை சமர்ப்பித்தார். அவ்வாறு கையெழுத்திடப்பட்ட படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்றைய தினம் டெல்லியில் தமிழ் மகன் உசேன் சமர்ப்பித்தார்.

தேர்தல் ஆணையம்
அவைத் தலைவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம் அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திடலாம் என உத்தரவிட்டது. இது தொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதை ஏற்ற தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.

டெல்லியில் இருந்து திரும்பிய தமிழ் மகன் உசேன்
இதையடுத்து டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தமிழ் மகன் உசேன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மை பொதுக் குழு உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு
அதை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதியை ஏற்று தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துவிட்டிருக்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கீடு செய்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் வெல்வோம்.

அதிமுக வேட்பாளர்
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சுற்றறிக்கையின் மூலம் வேட்பாளரை பொதுக் குழு தேர்வு செய்ய வேண்டும் என்ற நீதியின் அடிப்படையிலேயே முறைப்படி நடத்தி இருக்கிறோம். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ்ஸை பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமைக் கழகம்தான் முடிவு செய்யும் என தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் தரப்போ அவர்கள் என்ன அழைப்பது, இரட்டை இலைக்காக நாங்களே பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன்
அதே போல் நேற்றைய தினம் ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டார். அவருக்கு கட்சியில் அமைப்புச் செயலாளர் பதவியை ஓபிஎஸ் வழங்கியுள்ளார். அவர் லண்டனில் எம்பிஏ படித்தவர். அவருக்கு அடுத்த முறை நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இன்றைய தினம் எடப்பாடி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கே.எஸ். தென்னரசு வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications