வேண்டாம் எங்களுக்கு பாண்டா.. பஞ்சாயத்து பேசிய எடப்பாடி! பல்ஸ் தெரிந்த கோயலை பார்சல் கட்டிய ’மேலிடம்’
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் பரபரப்பான மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டாவை மாற்றி, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயலை அந்தப் பொறுப்புக்கு நியமித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.
இந்த மாற்றம், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியின் விருப்பத்தில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. பாண்டா எடப்பாடியின் அனுமதியின்றி பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசியதாலேயே இந்த மாற்றம் என்கின்றனர் அதிமுகவினர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக ஒன்றரை ஆண்டுகள் அதாவது 2024ஆம் ஆண்டிலேயே பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டது அரசியல் ரீதியாக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

அதிமுக பாஜக கூட்டணி
மக்களவைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட பின்னர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. திடீரென அதே பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும், இந்தக் கூட்டணியில் இன்னமும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாக அதிமுகவின் ஒரு பகுதி தலைவர்களும், தொண்டர்களும் கருதுகின்றனர். பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறிவருவதும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் சொல்லாமல் இருப்பதும் கவனிக்கத்தக்கது.
பைஜயந்த் பாண்டா
இந்த சூழ்நிலையில்தான், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கியப் பணிகளை முன்னெடுக்க, பாஜக தேசிய துணைத் தலைவரும் ஒடிஷா எம்பியுமான பைஜயந்த் பாண்டாவை தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார் ஜேபி நட்டா. பாண்டா சென்னை வந்து, எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமி
ஆனால் இங்கிருந்துதான் பிரச்சனை ஆரம்பமானதாக அதிமுகவினர் கூறுகின்றனர். "முழு அதிகாரமும் எனக்கே" என்ற எண்ணத்தில், பைஜயந்த் பாண்டா, எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை இல்லாமலேயே பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சில கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற விவகாரத்தில், எடப்பாடியுடன் கலந்தாலோசிக்காமல் வாக்குறுதிகள் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்- டிடிவி தினகரன்
மேலும், சென்னையில் இருந்தபோது தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை பாண்டா சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. "கூட்டணிக்கு தலைமை நான்தான்" என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவரும் நிலையில், பாண்டாவின் இந்த நடவடிக்கைகள் அவரை கடும் அதிருப்தியடையச் செய்ததாக கூறப்படுகிறது.
பைஜயந்த் பாண்டா நீக்கம்
இதன் பின்னணியில்தான், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சில தினங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், "மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு தமிழக அரசியல் சூழல் நன்கு தெரியும். அவர் எடப்பாடி மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடனும் நெருங்கிய நட்பில் உள்ளவர். கோயலை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தால், தொகுதி பங்கீடு சுமுகமாக நடக்கும்" என எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பியூஷ் கோயல்
இந்த கருத்தை, டெல்லியில் அமித் ஷாவிடம் நயினார் நாகேந்திரன் எடுத்துரைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து பைஜயந்த் பாண்டாவை மாற்றி, பியுஷ் கோயலை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க மேலிடம் முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இணை பொறுப்பாளராக இருக்கும் மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோகலுடன், மற்றொரு இணை பொறுப்பாளராக அர்ஜுன்ராம் மேக்வாலும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமித் ஷா
மொத்தத்தில், "பாண்டா வேண்டாம்" என்ற எடப்பாடியின் உறுதியான நிலைப்பாடே, இந்த மாற்றத்திற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாஜக மேலிடமும், தமிழ்நாட்டின் அரசியல் 'பல்ஸ்' புரிந்த ஒருவரை முன்வைத்து, அதிமுகவை நம்பிக்கையில் வைத்திருக்கவே இந்த 'பார்சல்' நடவடிக்கையை எடுத்ததாகவே பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள் -
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications