அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள்..செந்தில் பாலாஜிக்கு எதிராக களமிறங்கும் அதிமுக..கண்டன ஆர்பாட்டம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியள்ளார்.
கடந்த 2011-16 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரும் எழுந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து ஆதாரங்களைத் திரட்டியது.

ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அன்று இரவே அவரைக் கைது செய்தது. அதைத்தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 8 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முத்துச்சாமி வசமும் ஒப்படைக்கப்பட்டன. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதோடு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இதனை கண்டித்து இன்றைய தினம் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 2 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வகைகளில் விஞ்ஞானரீதியாக ஊழல்களைப் புரிந்து மக்கள் விரோத அரசாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிதும் கண்டுகொள்ளாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரியது. பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று, 15-ம் தேதி அதிமுக சார்பில் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் பார்த்துவிட்டு வந்துள்ளார். இச்செயல் மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காதது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் ஜூன் 21ஆம் தேதியான இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்: மாதம் ஒரு கணக்கீடு முறை திட்டத்தை அரசு அறிவித்தபோதே பலரும் அதை வரவேற்றிருந்தனர்.. உதாரணமாக ஒருவர் 2 மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே அர்த்தம்.. அதனால், இப்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது.
மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது. ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே அர்த்தம்.. அப்படியானால், 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும்.
இதுவே, மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று உதாரணத்தையும் சொல்லி, இந்த கோரிக்கைகளுக்கும் பெரும்பாலானோர் அழுத்தம் தந்து வருகிறார்களாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications