2 கேம்ப்.. அதிமுகவில் என்ன நடக்குது? “பொறுத்திருந்து பாருங்க” என பதில் அளித்த சண்முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் பூகம்பம் வெடித்துக் கிடக்கிறது. எம்.எல்.ஏக்கள் இரு அணிகளாகப் பிரிந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் தலைமையில் புரட்சிப்படை உருவாகியுள்ள நிலையில் அதிமுக விவகாரம் குறித்த கேள்விக்கு "பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதில் அளித்துள்ளார் சி.வி.சண்முகம்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்டுமே வெற்றி பெற்​றுள்​ளது. ஆனால், எதிர்க்​கட்சி அந்​தஸ்​து ​கூட கிடைக்​காத அளவுக்கு தோல்​வியைச் சந்​தித்​துள்​ளது. பல தொகு​தி​களில் 3 ஆம் இடத்​துக்கு சென்​றது, பலர் டெபாசிட் இழந்துள்​ளனர். வெற்றி பெற்ற எம்​எல்​ஏக்​கள் அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமிக்கு எதிராக போர்க்​கொடி தூக்கியுள்​ளனர். தோல்விக்குப் பொறுப்​பேற்று பொதுச் செய​லா​ளர் பதவி​யில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்​டும் என வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

cv shanmugam

அடுத்​தகட்ட நடவடிக்கை தொடர்​பாக முன்​னாள் அமைச்சர்​கள் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் இதர எம்எல்ஏக்​கள் கடந்த 3 நாட்​களாக சென்னை எம்ஆர்சிநகரில் உள்ள சி.​வி.சண்​முகம் இல்​லத்​தில் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். இந்த நிலை​யில், அதிமுக எம்​எல்​ஏக்​கள் 34 பேர் சி.​வி.சண்​முகம் தலைமையில் தவெக​வுக்கு ஆதர​வளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

முன்​ன​தாக, நேற்று காலை எடப்பாடி பழனி​சாமி தலை​மை​யில், சென்னை பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்லத்தில், சி.​வி.சண்​முகத்​தின் நடவடிக்கை தொடர்​பாக மாவட்​டச் செய​லா​ளர்​களுடன் ஆலோ​சனை நடத்தப்பட்டது. அதில், சி.​வி.சண்​முகத்​துடன் சமாதானப் பேச்சு நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. அதைத்தொடர்ந்து சிவி சண்முகத்துடன் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதற்கெல்லாம் அவர் மசியவில்லை.

அதி​முக எம்​எல்​ஏக்​கள் 34 பேரின் ஆதர​வுக் கடித​மும் தயாரிக்​கப்​பட்​டுள்​ளதாக கூறப்படுகிறது. மூன்​றில் 2 பங்​கு, அதாவது 32 எம்​எல்​ஏக்​களுக்கு மேல் தவெக​வுக்கு ஆதரவு தெரி​வித்​தால் கட்​சித் தாவல் சட்​டம் பாயாது என சட்ட ஆலோ​சனை​யும் பெறப்​பட்​டுள்​ளது. 34 பேரின் ஆதரவுக் கடிதத்​துடன், முதல்வர் ஜோசப் விஜய்யை சந்​திக்க சி.​வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ள​தாக கூறப்படுகிறது. அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்வதற்கான முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சட்டமன்றத்திற்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு குழுக்களாகவே வந்தனர். அதிமுகவில் கருத்து வேறுபாடு நிலவுவதை அப்பட்டமாக இந்த நிகழ்வு வெளிக்காட்டியது. அதிமுக பிளவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுத்தபோது சிலர் மட்டுமே மேஜையை தட்டிய நிலையில், எஸ்.பி வேலுமணி உறுதிமொழி எடுத்தபோது பலர் மேஜையை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்தனர். அதிமுகவுக்கு 47 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் 17 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மனு அளித்துள்ளதால் மீதமுள்ள 30 பேர் சி.வி.சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவாக உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள வீட்டில் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். சட்டப்பேரவையில் இன்று காலை பதவியேற்காத நிலையில் மாலையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை அவரது அறையில் சந்தித்து மயிலம் தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

முன்னதாக, சி.வி. சண்முகத்திடம் "மோதல் எப்போது முடிவுக்கு வரும்?" என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளது பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், "பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதில் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+