எப்பவுமே நாங்க தான்..அதிமுக இடத்தில் விஜய்யா? எம்ஜிஆர், ஜெ., இல்லாமல் அரசியலே இல்லை! சசிரேகா சுளீர்!
சென்னை: ஈரோட்டில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திமுகவுக்கும் - தவெகவுக்கும் தான் போட்டி என்றதோடு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை குறிப்பிட்டு பேசினார். இந்நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவை பேசாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் பேச முடியாது எனவும், எத்தனை பேர் வந்தாலும் எத்தனை நூறாண்டுகள் ஆனாலும், அதிமுகவின் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என பதில் அடி கொடுத்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளரான சசிரேகா.
கரூர் சம்பவத்துக்கு பிறகு முதன் முறையாக பொது வெளியில் மக்கள் சந்திப்பை இன்று நடத்தினார் விஜய். தனது பேச்சின் போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அதே நேரத்தில் திமுகவிற்கும் தவெகவுக்கும் தான் போட்டியென பேசிய விஜய், எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரை குறிப்பிட்டு பேசினார். இந்த நிலையில் அதிமுக களத்திலேயே இல்லாதது போல விஜய் பேசியதாகவும், அதிமுகவின் தலைவர்களை கையில் எடுப்பதன் மூலம் அந்த இடத்தை அவர் பிடிக்க முயல்வதாக விமர்சனங்கள் எழுந்தது.

ஈரோடு விஜய் பேச்சு
இந்த நிலையில் அதிமுக இடத்தை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாராலும் பிடிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார் அதிமுக செய்தி தொடர்பாளரான சசிரேகா. இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழிடம் பேசிய அவர்," அதிமுகவை அல்லது அதிமுகவின் தலைவர்களை யாரும் எடுத்துக் கொண்டு சென்று விட முடியாது. அதிமுக நூற்றாண்டுகளுக்கான சாதனையை செய்த இயக்கம். கடந்த ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றி இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்.
சசிரேகா பேச்சு
தமிழ்நாடு என்றாலே எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தாண்டி யாரும் இல்லை. எதிர்காலத்திலும் அதிமுகவின் ஆட்சியைப் பார்த்து யாரும் ஆச்சரியப்பட முடியாது. அந்த அளவுக்கு சாதனைகளை செய்திருக்கிறது. அதிமுகவையும் அதிமுகவையும், அதிமுக தலைவர்கள் இல்லாமலும் யாரும் அரசியல் செய்ய முடியாது, என்பதை விஜய் தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் பேசுவதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் அண்ணாவுக்கு பிறகு எம்ஜிஆர் ஜெயலலிதாவை வைத்து மட்டும்தான் பேச முடியும்.
எம்ஜிஆர் ஜெயலலிதா
எம்ஜிஆர் ஜெயலலிதாவை பற்றி பேசுவதால் அதிமுக இடத்தில் விஜய் என்பது கிடையாது. அவரே சொன்னது போல மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் எதையும் எளிதாக சீர்தூக்கி பார்த்து தான் முடிவெடுப்பார்கள். யாரோ பேசி விட்டார்கள் என்பதற்காக மக்கள் கண்மூடித்தனமாக முடிவெடுக்க மாட்டார்கள். மக்கள் தெளிவானவர்கள். அப்படித்தான் கடந்த காலங்களில் முடிவெடுத்தார்கள்.
தமிழ்நாடு அரசியல்
திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியென விஜய் வேண்டுமானால் சொல்லலாம். வரும் ஜனவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றம் கூடும். அப்போது ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும். மற்றவர்கள் பூடகமாக பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
அதிமுக திமுக
களத்தில் இருப்பது அதிமுக திமுக. சட்டமன்றத்திலும் நாங்கள் தான். கட்சி ஆரம்பிக்கும் அனைவருமே ஆளுங்கட்சியைத் தான் எதிர்ப்பார்கள். அதுதான் உலக நியதி. நாங்கள்தான் அடுத்த முதல்வர், நாங்கள்தான், அடுத்த பிரதமர் என பேசுவார்கள். இதெல்லாம் சாதாரணமாக கடந்து செல்ல வேண்டிய பேச்சு தான். யார் என்ன செய்தாலும் அதிமுக பெற்று இருக்கும் இடத்தை யாரும் பிடிக்க முடியாது. யார் வேண்டுமானாலும் துணை நிற்கலாம். அந்த இடத்தை எத்தனை நூற்றாண்டு ஆனாலும் யாரும் பிடிக்க முடியாது" எனக் கூறியிருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications