ஹேப்பி.. வேலூர் - சென்னை இடையே விமான சேவை.. அந்த அனுமதி கிடைத்தபின் உடனே தொடக்கம்.. வெளியான அப்டேட்!
சென்னை: உதான் திட்டம் மூலமாக வேலூர் - சென்னை இடையில் விரைவில் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் ராயுடு தெரிவித்துள்ளார். விமான சேவைக்கு உரிமம் கிடைத்தவுடன் விமான சேவை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், உடான் திட்டம் வேலூர், சேலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களிலும் செயல்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் விலையை கேட்டாலே நெஞ்சு வலியே வந்துவிடும். அந்த அளவிற்கு உணவு பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கும். நீண்ட நாட்களாகவே விமானத்தில் பயணிக்கும் பொதுமக்கள், விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குறைந்த விலையில் டீ, காபி
இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உடான் யாத்ரி கஃபே என்ற திட்டத்தை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த கஃபே மூலமாக வாட்டர் பாட்டில், டீ உள்ளிட்டவற்றை ரூ.10க்கும், காபி, சமோசா, ஸ்வீட்ஸ் உள்ளிட்டவற்றை ரூ.20 க்கும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உடான் யாத்ரி கஃபே திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராம் மோகன் நாயுடு பேசுகையில், சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பான சேவையை அளித்து வரும் சென்னை விமான நிலையத்தில் தனியார் வசம் ஒப்படைக்க தேவையில்லை. இதனால் அரசே நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம்
தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கேள்விக்கு, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அடுத்த வாரம் டெல்லியில் ஆலோசனை நடக்கவுள்ளது. புதிய விமான நிலையத்திற்கான இடமான பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசுதான். இடத்தேர்வில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. மாநில அரசு தேர்வு செய்யும் இடத்தில்தான் பணிகளை தொடங்குவோம்.
வேலூர் டூ சென்னை
அதேபோல் கோவை விமான நிலையம் அதின பயனாளிகளை கையாளுவதால் அதனை விரிவாக்கவும் திட்டமிட்டு வருகிறோம். அதேபோல் உடான் திட்டத்தின் மூலமாக வேலூர் - சென்னை இடையே விரைவில் விமான சேவை செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான உரிமம் கிடைத்தவுடன் விமான சேவைகள் தொடங்கும். சேலம், வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் உதான் திட்டம் என்று செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications