மன்னிப்புடன் நடிகர் சாந்தனு போட்ட பதிவு.. அஜித் குமாரை கொலை வழக்கில் கொதித்த பாக்கியராஜ் மகன்!
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் சரமாரியாக அடித்தனர். இதில் அவர் இறந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அஜித்குமாரை அடித்து கொன்ற போலீசாருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனு மன்னிப்பு கோரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் அஜித் குமார். இவருக்கு வயது 27. கடந்த மாதம் 27 ம் தேதி சிவகாமி என்பவர் தனது மகள் நிகிதாவுடன் காரில் கோவிலுக்கு வந்தார். சிவகாமியால் நடக்க முடியாது. இதனால் அவரை வீல்சேர் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அஜித் குமாரிடம் கார் சாவியை கொடுத்து பார்க் செய்யும்படி கூறினார்.

அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாது. இதனால் அவர் இன்னொருவரை உதவிக்கு அழைத்து காரை பார்க் செய்தார். அதன்பிறகு நிகிதாவிடம் கார் சாவி வழங்கப்பட்டது. அதன்பிறகு காரில் இருந்த 9.5 சவரன் நகை மற்றும் ரூ.2,500 காணவில்லை என்று நிகிதா கூறினார். இதுதொடர்பாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அஜித் குமாரை பிடித்து விசாரித்தனர். எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை தனிப்படை போலீசார் கோவிலின் மாட்டு தொழுவத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். மிளகாய் பொடியால் சித்ரவதை செய்தனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். அஜித்குமாரை போலீசார் சாதாரண உடை அணிந்து கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியானது. 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரனையை சிபிஐ வசம் ஒப்படைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நீதி விசாரணையும் நடைபெற்று வருகிறது.நகை திருட்டு வழக்கில் சட்டவிரோத காவலில் வைத்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வவேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் அஜித்குமார் கொலை தொடர்பாக நடிகர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனு எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நடிகர் சாந்தனு தனது கோபம் மற்றும் அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளார்.இதுபற்றி சாந்தனு கூறியிருப்பதாவது:
‛‛போலீஸ் காவலில் அஜித் குமார் இறந்திருப்தன் மூலம் மற்றொரு மனித உயிர் பறிபோயுள்ளது. அஜித்குமார் மரண விவகாரம் குறித்து தாமதாக பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அமைதியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அஜித்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். மற்றொரு சம்பவம், இன்னொரு உயிரிழப்பு என சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை'' என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அடித்து கொன்றனர். அப்போது அதிமுக ஆட்சி நடந்தது. அந்த சமயத்தில் திரைத்துறையினரும் பலரும் சாத்தான்குளம் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அரசை விமர்சனம் செய்தனர்.
ஆனால் தற்போது அஜித்குமாரை போலீசார் அடித்து கொன்றதற்கு ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கொதித்தெழுத்த நடிகர், நடிகர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. திமுக ஆட்சி என்பதால் அவர்கள் மவுனம் காப்பதாக விமர்சனங்களை பல்வேறு தரப்பினர் முன்வைத்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் நடிகர் சாந்தனு, ‛‛ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை'' என்பது போல் மற்றொரு சம்பவம், இன்னொரு உயிரிழப்பு என சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை என்று அஜித் குமார் கொன்ற விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
-
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications