அஜித் பவார் Since 1991..பாராமதியின் பிராண்டாகவே மாறிய பவார்! 9 முறை வென்ற தொகுதியிலேயே மரணித்த சோகம்
மும்பை: மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல்வாதிகளுள் ஒருவரும், மாநிலத்தின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவருமான அஜித் பவார், இன்று காலை பாராமதி விமான நிலையம் அருகே ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். இது மாநில அரசியலுக்கும், தேசிய வட்டார அரசியலுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பாராமதி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு ஒன்பது முறை வெற்றி பெற்ற நிலையில் அதே தொகுதியிலேயே மரணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை, மும்பையிலிருந்து பாராமதி விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார், தரையிறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், அஜித் பவார் உட்பட அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர், என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனமானிகள் இருவரும் உயிரிழந்தனர், என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நிகழ்ந்ததும், அஜித் பவாரின் குடும்பத்தினர் உடனடியாக பாராமதிக்கு விரைந்தனர்.ர். விபத்து நிகழ்ந்ததும், அஜித் பவாரின் குடும்பத்தினர் உடனடியாக பாராமதிக்கு விரைந்தனர்.

அஜித் பவார் மரணம்
நிகழ்வு தொடர்பாக மாநில அரசு மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் முழுமையான விசாரணை நடத்த உள்ளன. விபத்தில் உயிரிழந்த அஜித் பவார், நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனாகவும், அரசியலில் நீண்ட கால அனுபவமுள்ளவர். கட்சிக்குள் ஏற்பட்ட பிளவின் பின்னர், அவர் தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து தனி பிரிவை நிறுவி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்தை நீதிமன்றம் வழியாகப் பெற்றார்.
பாராமதி விமான விபத்து
அதன் பின்னர், அவர் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக 2010-2014 மற்றும் 2019-2026 வரை பதவி வகித்தார் அவரது அரசியல் வாழ்க்கையில், மாநில நிதித்துறை, மின்சாரம் போன்ற முக்கிய துறைகளை கவனித்து வந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அவர் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே மரணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாராமதி தொகுதி
முதல் முறையாக பாராவதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 1991 ஆம் ஆண்டு அஜித் பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்காக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்த அஜித் பவர் சட்டசபை தேர்தலில் 1991 ஆம் ஆண்டு பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு பிறகு 1995,1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1991 முதல் வெற்றி
1991 மற்றும் 1995 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கியவர் அஜித் பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தான் தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு அஜித் பவர் பிரச்சாரத்திற்காக சென்றார். அப்போதுதான் விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அஜித் பவரின் மரணம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உரிய விசாரணை
அவரது மரபு எண்ணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு மாநிலங்களில் முதல்வர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மகராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications