மதுரைக்கார கேங்ஸ்டர் அஜித்.. ஒழுங்கா இருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்.. சுரேஷ் சந்திரா ஆதங்கம்!
சென்னை: நடிகர் அஜித் குமார் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது தொடர்பாக அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பேசி இருக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த சுரேஷ் சந்திரா, ரசிகர்கள் ஒழுங்காக இருந்திருந்தால் ரசிகர் மன்றம் நடத்தி இருக்கலாம் என்று கூறியதோடு, ரசிகர் மன்றம் இல்லாத போதே இவ்வளவு கலாட்டா செய்கிறார்கள் என்று விமர்சித்தார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸாகி இருக்கிறது. அஜித் குமார் மட்டுமல்லாமல் த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரியா பிரகாஷ் வாரியர், சுனில், கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நீண்ட காலத்திற்கு பின் அஜித் குமார் இளமையான தோற்றத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கேற்ப "ஒத்த ரூபாயும் தாரேன்" என்று பாடலோடு வெளியான ட்ரெய்லர் அஜித் குமார் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் குமார் ரசிகர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தை கொண்டாடும் வகையில் பேனர் அமைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, தென்காசி என்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அஜித் குமார் ரசிகர்களின் கொண்டாட்டம் அதிர வைத்துள்ளது. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக அவரின் மேனேஜரான சுரேஷ் சந்திரா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்திற்கு வந்தார்.
அப்போது அஜித் குமார் ரசிகர் மன்ற விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுரேஷ் சந்திரா, ரசிகர் மன்றம் இல்லாமலேயே இவ்வளவு கலாட்டா செய்கிறார்கள்.. ஒழுங்காக இருந்திருந்தால் ரசிகர் மன்றம் நடத்தி இருக்கலாம் என்று தெரிவித்தார். சுரேஷ் சந்திராவின் இந்த பதில் அஜித் குமார் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
2011ஆம் ஆண்டு தனது பிறந்தநாளன்று அஜித் குமார் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். ஆனாலும் அஜித் குமாரின் ரசிகர்கள் எண்ணிக்கை அடுத்தக் கட்ட வளர்ச்சியை பெற்றது. அதேபோல் அஜித் குமார் ரசிகர்களின் சேட்டைகளும் எல்லை மீறி சென்றன. வலிமை அப்டேட், தல, அஜித்தே ..ளே போன்ற கோஷங்களை எழுப்பி அஜித் குமாருக்கே அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால் 6 மாதங்களுக்கு ஒருமுறை அஜித் குமார் அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் எல்லையற்ற கொண்டாட்டங்கள் காரணமாக தல, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை அஜித் குமார் துறந்தார். இதனால் அஜித் குமார் ரசிகர்கள் வரும் காலங்களிலாவது சேட்டைகளை குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications