அட்சய திருதியை: அதிகாலையிலேயே தங்கம் விற்பனை தொடங்கியது.. நகைக் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திருதியை தினமான இன்று நகைக் கடைகள் இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. மக்கள் ஏராளமானோர் போட்டி போட்டு தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றி சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திருதியை அன்று நகைகள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை திதி நேற்று இரவு 8.40 மணிக்குத் தொடங்கி, இன்று மாலை வரை நீடிக்கிறது. அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்க உகந்த நேரம் காலை 05:41 மணி முதல் பிற்பகல் 02:12 மணி வரை ஆகும்.

Gold Akshaya Tritiya Chennai

அதிகாலையிலேயே நகைக் கடைகள் திறப்பு

இந்நிலையில், இன்று அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, அதிகாலையிலேயே சென்னையில் உள்ள பல நகைக்கடைகள் திறக்கப்பட்டன. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் இன்று அதிகாலையிலேயே நகைக் கடைகள் திறக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான நகைக் கடைகளில் இன்று சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை 5 மணிக்கே நகைக் கடைகளை திறந்து, பூஜைகள் செய்யப்பட்டு அட்சய திருதியை சிறப்பு விற்பனை தொடங்கி உள்ளனர். நகைகளுக்கு லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு கவுண்டர்கள்

முன்னதாக சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், "அட்சய திருதியை தினத்தையொட்டி சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், பாரிமுனை, புரசைவாக்கம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் உள்ள நகைக் கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்படும்.

பல கடைகளில் கூட்டத்தை சமாளிக்க சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்கக் காசுகள், டாலர்கள் ஆகியவற்றை வாங்குபவர்கள், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் உள்ளிட்டோர் தாமதமின்றி வாங்கிச் செல்வதற்கு வசதியாக விரைவு கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன'' எனத் தெரிவித்துள்ளார்.

Gold Akshaya Tritiya Chennai

நகை வாங்குவோருக்கு சலுகை

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் சவரனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பல கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக் கடைகளில் புதுப்புது டிசைன்களில் ஏராளமான நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தங்கம் விலை இன்று

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.8,980-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.78,368-க்கு விற்பனை ஆனது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனையானது.

இன்று மார்க்கெட் துவங்கிய நிலையில், இன்றும் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இன்று அட்சய திருதியை என்பதால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுவது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+