"நீங்க எல்லாம் படிச்சு நல்ல நிலைமைக்கு போனும்" அதுதான் மகிழ்ச்சி.. கல்லூரி விழாவில் ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டோம் என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு சூழல் ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக கல்லூரில் விழாவில் மாணவர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு நான் முதல்வர்.. ஆனால் உங்களுக்கு (கொளத்தூர் தொகுதி மக்கள்) நான் சட்டமன்ற உறுப்பினர். உங்களுடைய அன்பு, வாழ்த்துக்களால் தான் நான் ஹாட்ரிக் வெற்றி பெற்றேன்.

மூன்று முறை எம்.எல்.ஏவாக தொடர்ந்து என்னை தேர்வு செய்தீர்கள்.. நீங்கள் எம்.எல்.ஏவாக தேர்வு செய்ததால்தான் நான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறேன். அதனால் நீங்கள் உரிமையோடு கேட்பதை நிறைவேற்றும் கூடுதல் பொறுப்பு உண்டு. எனக்கு வயது 70, ஆனால் 20 வயது மாதிரி இருப்பதற்கு காரணம் நீங்களதான். நீங்களும் படிப்பில் ஆக்டிவாக இருக்கிறீர்கள். இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
பசியோடு வாடாமல்: படிப்பு நமக்கு ஈசியா கிடைப்பது இல்லை.. எத்தனையோ போராட்டத்திற்கு பிறகு படிப்பு நமக்கு கிடைக்கிறது. கல்விதான் நம்மை மட்டும் இல்லை நமது தலைமுறையையே முன்னேற்றுவதற்கு அச்சாராமக அமைந்து இருக்கிறது. அதனால்தான் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் கல்வி கற்க எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
பசியோடு வாடாமல் இருக்கத்தான் காலையில் பள்ளிக்கு வந்தவுடன் காலை உணவுத்திட்டம்... மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வேலைக்கு போக நகர பேருந்துகளில் இலவச பயண திட்டம். உங்களில் பலபேர் இந்த பயணத்தால் பணத்தை மிச்சப்படுத்தி அதை கல்வி செலவிற்கு பயன்படுத்தியிருப்பீர்கள் என்று மனதார நம்புகிறேன்.
நன்றாக படிக்க வேண்டும்: படிக்கும் போது உங்கள் பாடத்திட்டத்தை தாண்டி திறமையை வளர்த்துக்கொள்ளதான் நான் முதல்வன் என்ற அற்புதமான திட்டம். அரசு பள்ளியில் படித்து விட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு இருக்கிறோம். படிப்பதற்காகவும் வேலைக்காகவும் வெளியூர் போக வேண்டும் என்றால் பெண்கள் பாதுகாப்பாக தங்கி இருக்க வசதியாக தோழி விடுதிகள் ஆரம்பித்து இருக்கிறோம்.
குடும்ப தலைவிகளாக இருக்கும் சகோதரிகளுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து மாதம் ஆயிரம் வழங்க போகிறோம். இப்படி ஒவ்வொரு கட்டமாக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதைஎல்லாம் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து எதாவது ஒரு சூழ்நிலையில், தருணத்தில் என்னை சந்திக்கும் போது உயரமான பதவியில் இருக்கிறோம்..
யாராலும் திருட முடியாது: இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டோம் என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு சூழல் ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதுதான் பெரியார், அண்ணா,கருணாநிதி கண்ட கனவு... அவர்களின் கனவை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதை விட வேறு பெருமை எனக்கு வந்து சேர முடியாது.
நாம் பெருமை அடைவது ஒருபக்கம் இருந்தாலும் அதைவிட எனக்கு முக்கியம் படிச்சி நீங்கள் பெருமை அடையவேண்டும். உங்கள் பெற்றோர் பெருமை அடையவேண்டும். உங்கள் தாய் தமிழ்நாட்டு பெருமை அடைய வைப்பதற்கு கல்விதான். கல்வியை யாராலும் திருட முடியாது. அதுதான் நிலையான சொத்து.. ஆகவே நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications