Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும்.. தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இன்று சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு பலரும் திரும்ப முன்பதிவு செய்துள்ளனர்.. ஆனால் என்ன சிக்கல் என்றால், பொதுவாக தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு அதிகமாக இருக்கும். 600 ரூபாய் என்றால் 1200 ரூபாயும். 1000 ரூபாய் என்றால் 2000 என்கிற அளவில் கட்டணம் இருக்கும். 750 ரூபாய் என்றால் 1500 என்கிற அளவில் கட்டணம் இருக்கும். அந்த வகையில் இந்த முறையும் கட்டணம் அதிகமாகவே இருந்தது.

All Omni buses will operate as usual and people should not panic: Tamil Nadu Omni Bus Owners Association

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரில் தமிழகம் முழுவதும் சுமார் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்த முறை அதிரடியாக சிறைபிடித்தனர். அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்துள்ளனர்.

பலரும் சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு திரும்ப பேருந்துக்கு இன்று முன்பதிவு செய்துள்ள நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் எழுந்தது.

அதிக கட்டணம்: விதிகளை மீறி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 119 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள் அதிக அளவில் அபராதத்தில் சிக்கி உள்ளன

ஆம்னி பஸ் கட்டணம்: இன்றுடன் தொடர் விடுமுறை முடியும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்தது. இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டிருக்கிறோம்.

சிறைபிடிப்பு: ஆனால் கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்யணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிககட்டணம் புகார் இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கி கொண்டிருந்த 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின் படி சிறைபிடித்துள்ளனர்.

பேருந்துகள் இயங்காது: இதனை கண்டித்தும், மீண்டும் இவ்வாறு சிறைபிடிப்பதை நிறுத்த கோரியும் இன்று 24.10.2023 தேதி மாலை 6 மணிமுதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது எனவும், 1 லட்சத்திற்கு மேலாக பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அவர்களை போக்குவரத்துதுறை சார்பாக வழியில் இறக்கிவிடுவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் இந்த முடிவை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பொதுமக்கள் கவலை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்ப விரும்பிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிக கட்டண பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனறும் பொதுமக்கள் வலியுறுத்தினர். நாளை ஊருக்கு வராவிட்டால் பலருக்கும் வேலை செய்யும் இடம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என பல்வேறு சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த ஸ்டிரைக்கும், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளருக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும். எனவே ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம். தமிழ்நாட்டில் ஓடும் 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் தான் உள்ளன. எங்கள் சங்கத்தில் 1.500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன" என்று மாறன் கூறினார்.

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தான் இன்று ஸ்டிரைக் அறிவித்திருந்த நிலையில், அந்த பேருந்துகளின் உரிமையாளர்கள் இன்று தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தை முடிவில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+