கொரோனா தடுப்பு நடவடிக்கை.. சட்டசபை உறுப்பினர் குழுவுடன்.. வரும் 19ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் வரும் மே 19ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 33,075 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் வரும் மே 19ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் இடம்பெற்றுள்ளனர். திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் சி விஜய பாஸ்கர் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல ஏ எம் முனி ரத்தினம் (காங்கிரஸ்), ஜி கே மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), மருத்துவர் சதன் திருமலை குமார் (மதிமுக) எஸ் எஸ் பாலாஜி (விசிக) இந்த ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல, நாகை மாலி (சிபிஎம்), ராமசந்திரன் (சிபிஐ), ஜவாஹிருல்லா(மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) இதில் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications