ஜெயிலில் என்னிடம் டீல் பேசினார்கள்.. சிசிடிவி பதிவு கண்டிப்பா இருக்கும்: பகீர் கிளப்பிய அமர்பிரசாத்!
சென்னை: "சிறையில் இருந்து என்னை அம்பாசமுத்திரம் அழைத்துச் செல்வதற்கு முன்பு என்னிடம் டீல் பேசினார்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. இதுதொடர்பான சிசிடிவி ஆதாரங்களும் கண்டிப்பாக இருக்கும்." எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் அமர் பிரசாத் ரெட்டி.
சென்னை ஈசிஆரில் உள்ள பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக சார்பில் 50 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. அனுமதியின்றி நடப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறையினரின் துணையோடு வந்தபோது அதனை எதிர்த்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அடுத்தடுத்து அவர் கைது செய்யப்பட்டார். செஸ் ஒலிம்பியாட் போஸ்டரில் முதல்வர் படம் மீது பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கு, நுங்கம்பாக்கம் பாஜக போராட்டத்தில் போலீசாருடன் வாக்குவாதம் செய்தது, ஆழ்வார்குறிச்சியில் அண்ணாமலை பாதயாத்திரையின்போது போக்குவரத்துக்கு இடையூறு செய்த வழக்கு என அடுத்தடுத்த வழக்குகளில் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டபோது ஜேசிபி கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் அமர் பிரசாத் ரெட்டி. அவர் தினமும் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அதன்படி, நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் அமர் பிரசாத் ரெட்டி.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமர் பிரசாத் ரெட்டி, அம்பாசமுத்திரம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு என்னுடன் டீல் பேசினார்கள். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றதால் அரசுப் பேருந்தில் அழைத்துச் சென்றனர். என்னிடம் டீல் பேசும் காட்சி சிறையில் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டி கூறுகையில், "சிறையில் எனது பக்கத்தில் படுத்திருந்தவர் காவல் துறையால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பிரபல குற்றவாளிகள் உள்ள ப்ளாக்கில் என்னை அடைத்து வைத்தனர். இதையெல்லாம் வைத்து என்னை மிரட்ட நினைக்கிறார்கள். இதற்கெல்லாம் பயந்துவிடுவோமா? சிறையில் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை நான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்லாமல் விடப்போவதில்லை.
மனிதர்களை மனிதர்கள் போல் நடத்தாமல், அங்கேயும் கொள்ளை அடிக்கிறார்கள்.வெளியில் கடைகளில் கிடைக்கும் 30 ரூபாய் காஜா பீடி சிறைக்குள் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள். சிறையில் ஒவ்வொரு அறையிலும் 50 பேர் நூறு பேர் என நாய்கள், எருமை மாடுகளை அடைத்து வைப்பது போல் வைத்துள்ளார்கள். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை இத்தனை அவலமாக இருக்கிறது.
சிறையில் இருந்து என்னை அம்பாசமுத்திரம் அழைத்துச் செல்வதற்கு முன்பு என்னிடம் டீல் பேசினார்கள். என்னை கேட் வரை அழைத்து வந்துவிட்டு கண்காணிப்பாளரும், கூடுதல் கண்காணிப்பாளரும், ஜெயிலரும் டீல் பேசினார்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. இதுதொடர்பான சிசிடிவி ஆதாரங்களும் கண்டிப்பாக இருக்கும். இதையெல்லாம் பாஜக தலைவரிடம் சொல்லி இருக்கிறேன். விரைவில் டெல்லியில் சென்று அதைப் பற்றி நான் கூற இருக்கிறேன்.
இதுபோன்று ஒரு சிலரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக அதிகாரிகள் அவர்களின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது. என்னிடம் பேசிய டீலுக்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதற்காக அரசு பேருந்தில் அழைத்துச் சென்றார்கள். அதற்கு நான் கவலைப்படவில்லை, அதில் எனக்கு மகிழ்ச்சி தான். பொதுமக்களுடன் பயணித்தேன். தனியாக அழைத்துச் சென்று இருந்தால் என்னை துப்பாக்கியால் சுடுவதற்கும் தயங்கமாட்டார்கள்.
ரவுடிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறி வருகிறது. அதை தடுப்பதை விட்டுவிட்டு பொய் வழக்குகள் போட்டு பாஜகவினரை முடக்க முடியும், பாஜகவின் வளர்ச்சியை தடுத்துவிட முடியும் என்று நினைத்தால் அதைவிட கோமாளித்தனம் வேறு எதுவும் இல்லை. நாங்கள் இன்னும் அசுர வளர்ச்சி அடைவோம். நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறுவோம். தயாராகிக் கொள்ளுங்கள், தோல்வி பயத்திலிருந்து தப்பிப்பதற்காக என் மீது எத்தனை வழக்குகள் போட்டுக்கொள்ளுங்கள்" எனப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications