சத்தமேயில்லை.. ஹைவேஸில் திடீர் மாற்றம்.. சாலையோரங்களில் அதிரடி காட்டிய தமிழக மின்சார வாரியம்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் தமிழக மின்துறை தொடர்ந்து பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்த வகையில், இப்போதும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியிருப்பினும் மின்சப்ளை சீராக வழங்கப்பட்டு வருகிறது.. ஒருவேளை, பழுதுகள் ஏற்பட்டாலும், உடனடியாக சரி செய்வதற்காகவே, சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நேற்றைய தினம்கூட செய்தியாளர்களிடம விரிவாக எடுத்து கூறியிருந்தார்..

Amazing announcement by Tamil Nadu Electricity Board about Electric pole along the Road

"மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அடிக்கடி ஏற்படும் பழுதுகள் காரணமாக ஏற்படும் மின் தடைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

வெளிச்சந்தைகள்: மின்னுற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து தினமும் கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் வெளிச்சந்தையிலிருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் மின் விநியோக பாதையிலுள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அடிக்கடி ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரி செய்யும் பொருட்டு, 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின் இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், ஒருசில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில் சில இடையூறுகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதையும் நிவர்த்தி செய்வதற்காக போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன" என்று கூறியிருந்தார்.

மின்சார துறை: இந்நிலையில், மின்சாரதுறை இன்னொரு அதிரடியை பிறப்பித்திருக்கிறது.. அதாவது, ஹைவேஸில் வரும் வாகனங்கள், வேகத்தடைகளை கவனிக்காமல் சென்று, வேகத்தடை மீது ஏறிவிடுகின்றன.. அத்துடன், அங்கே அருகிலிருக்கும் கரண்ட் கம்பங்களின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்திவிடுகின்றன..

இதனால், உயிர்பலி ஏற்பட்டு, இரண்டு தரப்பிற்குமே கடுமையான சேதம் ஏற்படுகிறது... இதையெல்லாம் தவிர்க்கவே, மின்சார வாரியம் புது உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

பழைய மின்கம்பம்: அதன்படி, சாலைகளின் ஓரங்களில் அமைக்கப்படும் மின்கம்பங்களை வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல் சற்றுத் தள்ளி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. அந்தவகையில், பழைய மின்கம்பங்கள் அகற்றுதல் மற்றும் புதிய மின் கம்பங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்.. அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும்... வேகத்தடைக்கு அருகே இருக்கும் மின்கம்பங்களை சற்று தள்ளி அமைக்க வாய்ப்புள்ளதா என்று பார்த்து அதற்கேற்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அறிவுறுத்தல்: மின்கம்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து மின்வாரிய அதிகாரிகள் செயல்பட வேண்டும்" என்று மின்சார வாரியம் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தியிருக்கிறது. மின்துறையின் இந்த அதிரடி உத்தரவால், விபத்துக்கள் வெகுவாக குறையும் என்று நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+