"அமித்ஷாஜி வருகிறார் என்றாலே இங்கு பயந்து கொள்கிறார்கள்".. ஒரே பேட்டியில் தெறிக்க விட்ட எல்.முருகன்
அமித்ஷாவின் சென்னை வருகை குறித்து எல்.முருகன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: "அமித்ஷாஜி வருகிறார் என்றாலே மற்றவர்கள் பயந்து கொள்கிறார்கள்.. அவரது வருகை பலருக்கு பயத்தை தருகிறது" என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் எல்.முருகன் பேசும்போது சொன்னதாவது: "அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 21-ம் தேதி வருகிறார்... இது அரசு முறையிலான பயணம்.. மொத்தம் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக கட்சி சார்பாக அவருக்கு சென்னை விமான நிலையதில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

முருகன்
நான் தலைவரான பிறகு, முதல்முறையாக அமித்ஷாஜி வருவதால், சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.. அதேபோல, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 200 பேர் கலந்து கொள்ளும் கூட்டம் நடக்க இருக்கிறது.

வரவேற்பு
இதேபோல, இன்னொரு கூட்டமும் நடக்க உள்ளது.. பாஜக சார்பில் அமித்ஷாவுடன் நடைபெறும் இந்த கூட்டங்கள் சோஷியல் டிஸ்டன்சுடன் நடத்தப்படும்.. இதைதவிர அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். வெற்றிவேல் யாத்திரையும் நடந்து வருவதால், அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

உத்திரபிரதேசம்
அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும்... குறிப்பாக உத்தரப்பிரதேசம் சென்றார்... அங்கு ஆட்சி ஏற்படுத்தினார். அதேபோல் அவர் செல்லும் மாநிலங்களில் பாஜக ஆட்சியை ஏற்படுத்துகிறார்.. அமித்ஷாஜியின் வருகையானது தமிழக பாஜகவுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தரும்... தைரியத்தை தரும், புத்துணர்வை தரும்.. எங்கள் தொண்டர்களுக்கு இன்னுமொரு உத்வேகத்தை தரும்.. அதேபோல பலருக்கு பயத்தை கொடுக்கிறது.. அவர் வருகிறார் என்றாலே மற்றவர்கள் பயந்து கொள்கிறார்கள்" என்றார்.

வேல் யாத்திரை
இதையடுத்து, முதல்வரை அமித்ஷா சந்தித்து பேச வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், முதல்வருடன் பேச வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன்" என்றார். தொடர்ந்து பேசிய முருகன், வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பதற்காக வரவில்லை என்றும் தெளிவுபடுத்தினர். அமித்ஷா வருகை இருப்பதால் 21-ம் தேதி ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை நிகழ்ச்சி ஒரு நாள் தள்ளி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications