வணக்கம் வைத்த அமமுக காமராஜ்.. விஜய் ரியாக்ஷனை பாருங்க! சட்டமன்றத்தில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், எம்எல்ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர். அமமுகவின் ஒரேயொரு எம்எல்ஏவான காமராஜ் பதவியேற்ற பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை பார்த்து வணக்கம் வைத்தார். ஆனால் அதற்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்றிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்த பின்னர், அதிக தொகுதிகளில் தவெக ஜெயித்திருந்தும் பெரும்பான்மை கிடைக்காததால் விஜய்யால் முதலமைச்சராக பதவியேற்க முடியவில்லை.

Vijay

எனவே கூட்டணிக்காக இடதுசாரிகள், விசிக கட்சிகளை தவெக அணுகியருந்தது. இதற்கிடையில் அமமுக மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தவெகவுக்கு ஆதரவளித்ததாக தகவல்கள் வெளியாகின. அவர் கையெழுத்து போட்டு கொடுத்த கடிதத்தை விஜய் ஆளுநரிடம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், குறுக்கே வந்த டிடிவி தினகரன், தன்னுடைய எம்எல்ஏ காமராஜை கடத்தி கொண்டு சென்று வலுக்கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியிருப்பதாக குற்றம் சாட்டினார்.

இப்படி செய்த தவெகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டு ரொம்பவும் சீரியஸானது. ஒருவேளை காமராஜிடம் குதிரை பேரம் பேசப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை செய்தவர்களின் எம்எல்ஏ பதவி காலியாகிவிடும். தவெக இதில் ஈடுபட்டிருப்பது உறுதியானால் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் கேள்விக்குறியாகும். இதனால் விஜய்யின் முதலமைச்சர் பதவிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த அளவுக்கு நெருக்கடிக்கு காரணமான காமராஜ் இன்று சட்டமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். பதிவியேற்க வரும்போது முதலமைச்சர் விஜய்யை பார்த்து வணக்கம் வைத்த அவர், பதவியேற்று முடித்துவிட்டு இருக்கைக்கு திரும்பும் முன்னர் மீண்டும் விஜய்யை பார்த்து வணக்கம் வைத்தார். ஆனால், விஜய் அவரை கண்டுக்கொள்ளவில்லை. தவெகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காமராஜரை விஜய் வேண்டும் என்றே கண்டுக்கொள்ளாமல் தவிர்த்திருக்கிறார் எனவும் பலரும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+