லண்டன் சுற்றுப்பயணம் ஓவர்.. சென்னை வந்தார் முக ஸ்டாலின்.. திமுகவினர் உற்சாக வரவேற்பு
சென்னை: இருவார கால லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்டாலினை, திமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் 2 வார கால சுற்றுப்பயணமாக லண்டன் சென்றார். லண்டனில் பேரன் இன்பநிதி (தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் மகன்) படித்து வந்தார்.
மான்செஸ்டர் நகரில் .ள்ள பல்கலைக்கழதக்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான படிப்பை இன்பநிதி முடித்தார். இதையடுத்து பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முக ஸ்டாலின் தனது மனைவி துர்கா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உள்ளிட்டவர்கள் லண்டன் சென்றனர்.
அதன்பிறகு இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகின. அதன்பிறகு சில நாட்கள் லண்டனில் ஓய்வெடுத்த முக ஸ்டாலின் இன்று காலை சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் முக ஸ்டாலின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் முக ஸ்டாலின் வந்திறங்கினார். அவரை திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கேஎன் நேரு உள்பட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். முக ஸ்டாலினுக்கும் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். இந்த வேளையில் திமுக தொண்டர்கள் வாழ்க வாழ்க் ஸ்டாலின் என்று கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
