இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. தினகரனின் அதிரடி அரசியல் மூவ்
Recommended Video
சென்னை: தோல்விகளை கண்டு துவளாத டிடிவி தினகரன் அதிரடியான அரசியல் நகர்வுகளுக்கு திட்டமிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருந்தது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் இத்துடன் தினகரன் அத்தியாயம் முடிந்ததாக முடிவுரை எழுதிவிட்டு அந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள் திமுக அதிமுக என்று தேடி தேடி இணைந்து கொண்டனர்.
இதனால் குறிப்பாக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அதிமுகவை தேடி சென்று இணைந்தனர். ஆனால் தோல்வியை கண்டு துவளாமல் அமமுக தலைமை அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஓரளவு வாக்குகள்
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலிலல் டிடிவி தினகரனின் அமமுக கட்சி சிவகங்கை(ஒரு லட்சத்து 17 ஆயிரம்) , தேனி ( ஒரு லட்சம் வாக்குகள்) , மதுரை (85 ஆயிரம் வாக்குகள்), திண்டுக்கல், ராமநாதபுரம்(ஒருலட்சத்து 20 ஆயிரம்) விருதுநகர் ( ஒரு லட்சத்து 7 ஆயிரம்) உள்பட தென் மாவட்டங்களில் ஓரளவு நல்ல வாக்கு சதவீதத்தை பெற்று உள்ளது. இந்த தொகுதிகளில் எல்லாம் அமமுக மூன்றாவது இடத்தை பிடித்தது.

தஞ்சை திருச்சியில்
இதேபோல் டெல்டா மாவட்டங்களான தஞ்சையில் ஒரு லட்சம் வாக்குகளும், திருச்சியில் ஒரு லட்சம் வாக்குகளும், அமமுக பெற்று இருந்தது. இதன்படி அமமுக தமிழகம் முழுவதும் சுமார் 5 சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தது.

உள்ளாட்சி தேர்தலுக்கு குறி
இந்நிலையில் தங்களுக்கு அதிக வாக்குகள் அளித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அந்த பகுதிகளில் அமமுகவை பலப்படுத்த தினகரன் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் தேர்தலில் கணிசமாக வெற்றி பெற முடியும் என அக்கட்சி அதற்கான திட்டமிடுதலை தொடங்கி உள்ளது.

பெரிய வெற்றி அவசியம்
உள்ளாட்சி அளவில் பெரிய அளவில் வெற்றி பெற்றால் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பயன்பெறுவார்கள். அதன் மூலம் கட்சியை வலுவான பாதைக்கு கொண்டு முடியும் என தினகரன் கருதுகிறாராம்.

கட்சியும் அங்கீகாரம்
தற்போது கட்சிக்குள் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைரவில அனைத்து மட்டத்திலும் நியமனங்கள் நடக்கப் போகிறதாம். இதேபோல் தேர்தல் ஆணையத்திடம் கட்சிக்காக விண்ணப்பித்து மாதங்கள் கடந்துவிட்டது. தேர்தல் ஆணையம் கட்சியாக அமமுகவை அங்கீகரித்த பின்னர் வேகம் அதிகரிக்க உள்ளதாம். எனவே இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்கிறார்கள் அமமுகவினர்.












Click it and Unblock the Notifications