அமுதா ஐஏஎஸ் கலக்குறாங்களே.. அடுத்தடுத்த அதிரடியில் தமிழக அரசு..டாஸ்மாக்கில் வருகிறது புதிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, 4,238 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை விற்பனை செய்வதற்காக 238 எலைட் கடைகளும் செயல்படுகின்றன.
இது ஒருபுறம் இருக்க, டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளிலும், அதன் நிர்வாகம் கவனம் செலுத்தி உள்ளது. இந்த நிர்வாக வசதிக்காகவே, டாஸ்மாக் 5 மண்டலங்களாகவும், 38 மாவட்டங்களாகவும் ஏற்கனவே பிரிக்கப்பட்டு உள்ளது.

ஜொலிஜொலிப்பு: இதில் ஒரு மாவட்டத்துக்கு 5 கடைகள் வீதம் முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளை நவீனப்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல, மதுபிரியர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த கடைகள் மின்னொளியில் ஜொலிக்க போகிறதாம். விலை பற்றின டிஜிட்டல் பலகைகளும் வைக்கப்பட உள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் அமைச்சர் முத்துசாமி, சில அதிரடிகளை வெளியிட்டிருந்தார். அதன்படி, மின்சார கட்டணத்தை நிர்வாகம் பார்த்து கொள்ளும், அனைத்து கடைகளிலும் பணத்தை வைக்க பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும், பணியாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் என்றெல்லாம் அறிவித்திருந்தார்.
அதுமட்டுமல்ல, கடைகளில் பாட்டில் உடையும்போது அதற்கு விற்பனையாளர்களே பொறுப்பாக இருந்த நிலையில், இனிமேல், அதை துறையின் சார்பில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
சர்ச்சைகள்: எனினும் டாஸ்மாக் தொடர்பாக தொடர்ந்து சில புகார்கள் வெடித்தபடியே உள்ளன.. அதில் ஒன்றுதான், பார்கள் குறித்து சர்ச்சைகளாகும்.. அரசிடம் முறையாக அனுமதி பெற்று, உரிய டெண்டரின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விதி இருந்தபோதிலும், சிலர் சட்ட விரோதமாக செயல்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தபடி உள்ளன.
மதுபானங்களை வாங்கி பார்களில் சென்று குடிப்பவர்களால், சில சமயம் அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடுகின்றன.. இதனால் ஏற்படும் வன்முறை காரணங்களால், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் நிம்மதியாக வேலை பார்க்க முடியாத சூழல் உள்ளது.. எந்நேரமும் பதற்றத்திலும், பரபரப்பிலும் வேலை பார்க்க வேண்டியதாயிருக்கிறது.
சட்டவிரோதம்: இதுபோன்ற சட்டவிரோத பிரிவுகளை கட்டுப்படுத்தவும் முடியாத சூழலில், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பல புகார்களை தொடர்ந்து அளித்து வந்தனர். இதையடுத்துதான், இலவச தொலைபேசி எண்ணை இதற்காகவே அறிமுகம் செய்ய போகிறதாம் டாஸ்மாக் நிர்வாகம்..
பார்களில் விற்கப்படும் தின்பண்டங்களில் தரம் மற்றும் விலை பற்றியோ மற்றும் மது தொடர்பாக வேறு ஏதாவது புகார் இருந்தாலோ டாஸ்மாக் நிறுவனத்தின் இலவச கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800425 2015 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று ஏற்கனவே நடைமுறை வழக்கத்தில் உள்ள நிலையில், அடுத்த அதிரடியை அமுதா ஐஏஎஸ் விரைவில் வெளியிட போகிறாராம்.

மரக்காணம்: ஏற்கனவே, மரக்காணம் கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்திருந்தது.. குறிப்பாக, தமிழக முதல்வர், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரத்யேகமான அறிவிப்பை வெளியிட்டதாக கோட்டை வட்டாரங்களில் கூறப்பட்டது.
அதாவது, "கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வேண்டும், அதிகாரிகள் உடனே துரிதமாக செயல்பட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டால், அமுதா ஐஏஎஸ் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்துறை அமைச்சகம் இதில் மிக விரைவாக செயல்பட வேண்டும் என்றெல்லாம் முதல்வர் உத்தரவு பிறப்பித்ததாக செய்திகளும் வெளியாகியிருந்தன.
உறுதி: இதையடுத்து, உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்ஸும், "கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்! என்று உறுதி தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications