சென்னையில் திடுக்.. 11 வயது சிறுவனை குதறிய ராட்வைலர் நாய்! இதுக்கு இல்லையா என்டு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ராட்வைலர் வகை நாய் கடித்ததில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மாங்காடு பகுதியில் உள்ள கொழுமணிவாக்கம் சார்லஸ் நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ராட்வைலர் நாயின் உரிமையாளர் தனது நாயை வாக்கிங் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் துஜேஷை ராட்வைலர் நாய் திடீரென தாக்கியுள்ளது. இதில் சிறுவன் படுகாயமடைந்திருக்கிறார். பின்னர் சிறுவனை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Chennai Rottweiler dog

இந்த சம்பவத்தையடுத்து நாய் உரிமையாளர்கள் நீலா மற்றும் கார்த்திக் மீது மாங்காடு காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றொர் புகார் அளித்துள்ளனர். குறிப்பிட்ட வகை நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தடையை மீறி ராட்வைலர் நாய் எப்படி வளர்க்கப்பட்டது என்று சிறுவனின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை ராட்வைலர் நாய்கள் தாக்கியதையடுத்து, குறிப்பிட்ட நாய் இனங்களை வளர்க்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.

"கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. 12.03.2024 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான,

பிட்புல் டெரியர்
தோசா இனு
அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர்
பிலா ப்ரேசிலேரியா
டோகா அர்ஜென்டினா
அமெரிக்கன் புல் டாக்
போயர் போயல்
கன்கல்
சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக்
காக்கேஷியன் ஷெபர்டு டாக்
சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக்
டோன் ஜாக்
சர்ப்ளேனினேக்
ஜாப்னிஸ் தோசா
அகிதா மேஸ்டிப்
ராட்வீலர்ஸ்
டெரியர்
ரொடீசியன் ரிட்ஜ்பேக்
உல்ப் டாக்
கேனரியோ அக்பாஸ் டாக்
மாஸ்கோ கார்ட் டாக்
கேன்கார்சோ
பேண்டாக்

என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும். இனப்பெருக்கம் செய்வதற்கும். வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும்.

அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்" என தனது உத்தரவில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+