தாம்பரத்தில் ஓடும் பேருந்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயருக்கு மறக்க முடியாத சம்பவம்.. யார் அவர்கள்?
சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகர பேருந்தில் இருக்கையில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஓடும் பஸ்சில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயரை சரமாரியாக அடித்து உதைத்த தாய்-மகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரும்புலியூர் பஸ் ஸ்டாப்பில் நடந்த சம்பவம் தொடர்பாக பார்ப்போம்.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று மாலை மாநகர பேருந்து (தடம் எண.500) சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.இதனால் பலர் பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றார்கள். அந்த பேருந்தில் மேடவாக்கத்தில் தங்கி, பெருங்களத்தூர் ஜி எஸ் டி சாலையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும் வேலை செய்து வந்தார்.

ஓடும் பேருந்தில் ஏறிய பெண் என்ஜினீயரை, அதே பஸ்சில் கைக்குழந்தையுடன் பயணம் செய்த ஒரு பெண்ணும், அவரது தாயாரும் சேர்ந்து திடீரென சரமாரியாக அடித்து உதைத்தார்களாம். அதை தட்டிக்கேட்ட மற்றொரு பெண்ணையும் இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளார்கள். இதனால் சகபயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பஸ் டிரைவர், இரும்புலியூர் பேருந்து நிறுத்ததில் நிறுத்தினார். மேலும் தகராறில் ஈடுபட்ட பெண்களையும் அவர் கீழே இறக்கினார்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் என்ஜினீயர் கதறி அழுதார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேரில் சென்று அந்த பெண்ணிடம் விசாரித்தார்.
அப்போது நடந்த விசாரணையில் பெண் என்ஜினீயரை தாக்கிய தாய்-மகள் இருவரும் பஸ்சில் துண்டு போட்டு 'சீட்' பிடித்ததும், அவர்கள் படிக்கட்டு வழியாக ஏறி வருவதற்குள் பாதிக்கப்பட்ட பெண் என்ஜினீயர் அந்த இருக்கையில் அமர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருக்கையில் இருந்து அவரை எழுந்திருக்கும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர் மறுத்ததால் ஆத்திரத்தில் ஓடும் பஸ்சில் தாய்-மகள் இருவரும் குழந்தையை இடித்து விட்டாய் என கூறி பெண் என்ஜினீயரின் கழுத்தை நெரித்தும், அவரது தலைமுடியை இழுத்து, கையால் தாக்கியதுடன், காலாலும் எட்டி உதைத்து தாக்கினார்களாம்.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் 3 பெண்களையும், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் அழைத்த சென்று ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம், பாதிக்கப்பட்ட பெண் என்ஜினீயரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பெண் என்ஜினீயரை தாக்கிய தாய்-மகள் இருவரையும், கை குழந்தையுடன் இருந்ததால் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர். ஓடும் பஸ்சில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயரை தாய்-மகள் இருவரும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications