Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அண்ணா நகரில் பிரபல முடி மாற்று அறுவை சிகிச்சை மையம் சீல் வைப்பு.. பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்த மிஸ்டர் ஹேர் கிளினிக் முடி மாற்று அறுவை சிகிச்சை மையம் உரிய அனுமதி இன்றிச் செயல்பட்டு வருவதாக வந்த புகாரின் பேரில் இழுத்து மூடப்பட்டது. உரிய பயிற்சி மற்றும் அதற்குரிய படிப்பறிவு இல்லாதவர்களைக் கொண்டும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முடிமாற்று சிகிச்சை அளித்தது தெரியவந்ததால் அந்த மையத்தினை ஊரக மருத்துவச் சேவை இயக்குநரக இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழுவினர் மூடினார்கள்.அந்த மையத்தில் பணியாற்றி 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Hair Transplant என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு சாதாரண சலூன் கடை வேலை அல்ல; அது ஒரு முறையான மருத்துவ அறுவை சிகிச்சை முறையாகும்.. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களே செய்ய முடியும். எம்.பி.பி.எஸ் முடித்து, அதன்பின் தோல் சிகிச்சை (Dermatology - MD/DVL) அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Plastic Surgery - MCh) முடித்தவர்கள் மட்டுமே இந்தச் சிகிச்சையைச் செய்ய வேண்டும். இவர்கள் முடி மாற்று சிகிச்சையில் முறையான கூடுதல் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

Anna Nagar hair transplant surgery center Why was Mr Hair Clinic in Chennai sealed

மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலை

மருத்துவர் கண்காணிப்பில் மட்டுமே உதவியாளர்கள் செயல்பட வேண்டும். நர்சிங் அல்லது மருத்துவத் துறை சாராதவர்கள் (சலூன் தொழிலாளர்கள்) அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கிடையாது. தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, ஒவ்வொரு மையமும் மாநில அரசின் சுகாதாரத் துறையிடம் பதிவு செய்திருக்க வேண்டும். உரிய உரிமம் இன்றிச் செயல்படும் மையங்களைச் சீல் வைக்கவும், உரிமையாளர்களைக் கைது செய்யவும் அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.

கட்டுப்பாடுகள் உள்ளன

அங்கீகாரம் பெறுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு சாதாரண அறையில் இதைச் செய்ய முடியாது. ஒரு முடி மாற்று மையத்தில் ம்கிருமி நீக்கம் செய்யப்பட்ட முறையான அறுவை சிகிச்சை அறை இருக்க வேண்டும். நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கும்போது அல்லது லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதைக் கையாள ஒரு மயக்க மருந்து நிபுணர் உடனிருக்க வேண்டும் அல்லது அவர் அழைப்பில் இருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், டிஃபிபிரிலேட்டர் மற்றும் அவசரக் கால மருந்துகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

குறைந்த விலை

சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது மையங்களில் திடீர் சோதனை நடத்தி, அங்குள்ள மருத்துவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். அதேபோல் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற பயோ-மெடிக்கல் வேஸ்ட் மேலாண்மை உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். தவறான வாக்குறுதிகளை அளித்தோ அல்லது "குறைந்த விலை" என ஆசை காட்டியோ தகுதியற்றவர்கள் விளம்பரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இவ்வளவு விஷயங்கள் பின்னணியில் இருக்கும் நிலையில், சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்த பிரபல முடி மாற்று அறுவை சிகிச்சை மையம் அதிரடியாக மூடப்பட்டிருக்கிறது.

அண்ணா நகர் மையத்தில் ஆய்வு

சென்னை அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான 'மிஸ்டர் ஹேர் கிளினிக்' என்ற முடி மாற்று சிகிச்சை மையம், உரிய அனுமதி இன்றிச் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் ஊரக மருத்துவச் சேவை இயக்குநரக இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழுவினர் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் முடிமாற்று சிகிச்சை மையத்துக்குச் சென்றார்கள். அவர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ராஜாராம் என்பவர் அண்ணா நகர் சிகிச்சை மையத்தை நடத்தி வந்தார். அவர் உரிய அனுமதி இல்லாமலும், உரிய பயிற்சி மற்றும் அதற்குரிய படிப்பறிவு இல்லாதவர்களைக் கொண்டும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முடிமாற்று சிகிச்சை அளித்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஒரு லட்சம் கட்டணம்

இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த 15 பேரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முடிமாற்று சிகிச்சை அளித்து இருப்பதும், இதற்காக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் பெற்று வாடிக்கையாளர்களுக்கு முடிமாற்று சிகிச்சை அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மூன்று பேர் கைது

இங்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்வீர் சிங் (வயது 33), அர்வீப்சிங் (24) ஆகிய இருவரும் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு முடி மாற்று சிகிச்சை அளிக்கக்கூடிய ஆபரேஷன் தியேட்டரில் பணிபுரிந்து வந்ததும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் சித்திக் (27) முடி மாற்று சிகிச்சை பெறுபவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டதா

முடி மாற்று சிகிச்சையால் யாருக்காவது உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும், இங்கு சிகிச்சை பெற்றவர்களின் பட்டியல்களைச் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது அந்த முடி மாற்று சிகிச்சை மையத்தை மூடி விட்டு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் கவனத்திற்கு

நீங்கள் ஒரு வேளை முடி மாற்று அறுவை சிகிச்சை மையத்திற்குச் சென்றால், அங்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒரு சரும நிபுணரா அல்லது பிளாஸ்டிக் சர்ஜனா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறைந்த விலைக்கு ஆசைப்பட்டுத் தகுதியற்றவர்களிடம் சிகிச்சை பெறுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+