முதல்வர் சந்திக்கிறார் சரி! யூசுப் அலியை சபரீசன் ஏன் சந்திக்க வேண்டும்? அண்ணாமலை கேள்வி
சென்னை: முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தின் போது சந்தித்த முதலீட்டாளர்களை கடந்த பிப்ரவரி மாதமே அவரது மருமகன் சபரீசன் எதற்காக சந்தித்தார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை திநகரில் செய்தியாளர்களை சந்தித்த போது, முதல்வரின் குடும்பத்தினர் பிப்ரவரி 2ஆம் தேதி துபாய்க்கு விமான பயணம் செய்ததற்கான ஆதாரங்களை அண்ணாமலை காட்டினார்.
இதையடுத்து அண்ணாமலை கூறுகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி பால்கன் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவன விமானத்தில் சென்னையிலிருந்து திமுகவை சேர்ந்த உதயநிதி, சபரீசன், கார்த்திகேயன், திமுகவின் குடும்ப ஆடிட்டர் சண்முகராஜ் உள்பட 9 பேர் துபாய் சென்றனர்.

முதல்வர் மருமகன்
அங்கு முதல்வரின் மருமகன் சபரீசன் நடத்திய கூட்டத்தில் ஸ்டாலின் சந்தித்த லூலூ குரூப்ஸ் தொழிலதிபர் யூசுப் அலியும் பங்கேற்றிருந்தார். முதல்வர் துபாய் சென்று திரும்பியதும் தமிழகத்திற்கு 6100 கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார். அதில் 4,600 கோடி ரூபாயை துபாயில் இருக்கும் இரு தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ஆசாத் மூப்பன் முதலீடு செய்கிறார்கள்.

யூசுப் அலி
அதில் 70 சதவீதம் யூசுப் அலிதான் முதலீடு செய்கிறார். பிப்ரவரி 2 ஆம் தேதியே துபாய் சென்று சபரீசன் கூட்டம் போட்ட ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். திமுக அமைப்புச் செயலாளர் பாரதி, முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 100 கோடி ரூபாய் முதல்வர் பொது நிவாரணத்திற்கு செலுத்த வேண்டும் என எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சந்திக்க தயார்
நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். அண்ணாமலை அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கிஇருக்கிறார் என்றும் பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் சென்னை எண்ணூர் மின் திட்டத்தை பிஜிஆர் நிறுவனத்திற்கு தான் வழங்க வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்.

பிஜிஆர் நிறுவனம்
அதை ஏற்று மின்வாரியம் பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குகிறது. இதற்கு முதல்வர் பதில் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தான் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் ஷாப்பிங் மால் கட்ட போவதாக தெரிவிக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் எல்லாம் மோட்டார் வாகன தயாரிப்பு என பல தொழிற்சாலைகள் அமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.

ஆதாரங்கள் இருக்கே- பதில் எங்கே?
மால் கட்டுவதை பெருமையாக நினைக்கும் முதல்வரை தமிழகத்தில்தான் பார்க்கிறேன். ஆதாரங்களை வைத்து தான் அனைத்து கேள்விகளையும் கேட்கிறோம். அதற்கு பதில் தர வேண்டுமே தவிர தரக்குறைவாக பேசுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 9 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றி வந்திருக்கிறேன். சொந்த கட்சியின் சின்னத்தில் நிற்க முடியாதவர்கள் எல்லாம் என்னை சுய விளம்பரத்திற்கு பேசுவதாக கூறுகிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications