பெட்ரோல் விலையை குறைக்க அண்ணாமலை கோட்டைக்கு போகக் கூடாது.. எங்கே போகனும் தெரியுமா? முத்தரசன் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி அண்ணாமலை கோட்டைக்குப் போவதைவிட செங்கோட்டைக்கு போவது நல்லது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் நகர்ப்புற வேலை வாய்ப்பை உறுதிபடுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Annamalai can go to red fort to reduce petrol, diesal price - CPI state secretary Mutharasan requests

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சியினர் மாநிலச் செயலாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், "அண்டை நாடான இலங்கையில் எப்படி விலைவாசி உயர்ந்து உள்ளதோ அதே போன்று தான் இந்தியாவிலும் உயர்ந்துள்ளது. மோடி அரசின் நடவடிக்கைகளால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்." என்றார்.

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முத்தரசன், "அண்ணாமலை செங்கோட்டைக்குப் போகலாம்.

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிட போவதாக அண்ணாமலை கூறுகிறார். என்னைப் பொறுத்தவரையில் அண்ணாமலை கோட்டைக்குப் போவதைவிட செங்கோட்டைக்கு போவது நல்லது. அதற்கான பாதையை தான் சொல்லத் தயார்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+