ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?
சென்னை: தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் செல்வாக்கை இழந்துவரும் காங்கிரஸ் கட்சியும், எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தி வரும் பாஜகவும் இந்த சட்டமன்றத் தேர்தலில் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் தள்ளாடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் தற்போது இருக்கும் மாநில தலைமையால் தேசிய தலைமைக்கு பிரச்சனை என்றால் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலையால் அக்கட்சிக்கு தலைவலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றிய போதே தமிழகத்தில் பாஜகவின் வருங்கால வளர்ச்சி கேள்விக்குறி ஆகிவிட்டது என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் நீட்சியாக தான் இப்போது தேர்தல் களத்தில் அண்ணாமலை ஆதரவு அலை என்னும் ஒற்றை அஸ்திரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் தள்ளாடுகிறது பாஜக தேசிய தலைமை.
தமிழகத்தில் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவரை அதாவது நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமித்ததே தவறு என பல பாஜக தொண்டர்களே சமூக வலைதளங்கள் மூலம் பொதுவெளியில் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

தமிழக பாஜக
மேலும் நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி சீனிவாசன் ஆகியோர் கூட்டணி அமைத்து அண்ணாமலைக்கு எதிராக சதி செய்து வருவதாகவும் பாஜகவினரே குற்றம் சாட்டுகின்றனர். நால்வரின் கூட்டு சதிக்கு பாஜகவினர் பல்வேறு எடுத்துக்காட்டுகளை முன்வைக்கின்றனர்.
அதிமுக
அதாவது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட 27 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதில் பெரும்பாலான தொகுதிகள் பாஜகவிற்கு செல்வாக்கில்லாத தொகுதிகள் என்றும் பாஜக செல்வாக்கு இருக்கும் தொகுதிகளை வேண்டுமென்றே அதிமுக வசம் வைத்துக்கொண்டு தாமரையால் மண்ணெடுக்க முடியாத பல தொகுதிகளை பாஜகவிடம் தள்ளி விட்டுள்ளதாக ஆதாரங்களோடு குற்றம் சாட்டுகின்றனர் தாமரை கட்சியினர்.
- வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட்
- விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா!
- வேட்பு மனுக்களை என்னென்ன காரணங்களுக்கு நிராகரிக்க கூடாது? தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
- வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்
- யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்!
உட்கட்சி பூசல்
குறிப்பாக கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவை விட பாஜக அதிகம் ஓட்டுகள் பெற்ற சட்டமன்ற தொகுதிகளான தி நகர் மற்றும் வேளச்சேரி தொகுதிகளை கூட்டணியில் கேட்டுப் பெறவில்லை என நால்வர் கூட்டணி மீது தாமரை கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் அண்ணாமலை போட்டியிடுவதற்காக களப்பணி செய்து வந்த தொகுதிகள் எதையும் அண்ணாமலைக்கு ஒதுக்காமல், அவரை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து வருவதாகவும், இதனால் அண்ணாமலைக்கு பின்னடைவு என்பதை விட பாஜகவிற்கு தான் தமிழகத்தில் பின்னடைவு ஏற்படும் என்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
2026 சட்டசபை தேர்தல்
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தான் போட்டியிட விரும்பியதாகவும், அதற்காகவே பல மாதங்களாக இந்த தொகுதிகளில் அண்ணாமலை ஆதரவாளர்கள் இறங்கி வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை
ஆனால் அண்ணாமலையின் சாய்ஸ் லிஸ்டில் இருந்த இந்த நான்கு தொகுதிகளில் கோவை வடக்கு தொகுதியை மட்டும் பாஜகவிற்கு ஒதுக்கிவிட்டு சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு தொகுதிகளை அதிமுக தன் வசமே வைத்துக் கொண்டது அண்ணாமலைக்கு எதிரான சதி என்றே குற்றம் சாட்டுகிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள். ஆனால் தற்போது நிலைமையே வேறாகிவிட்டது. அண்ணாமலையை எப்படியும் சரிக்கட்டி விடலாம் என நினைத்திருந்த பாஜக தேசிய தலைமை விடாப்பிடியாய் அடம்பிடிக்கும் அண்ணாமலையால் அப்செட் மோடியில் இருக்கிறது.
பாஜகவில் மோதல்
புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வரவழைக்கப்பட்டு பியூஸ் கோயில் அண்ணாமலையை கன்வின்ஸ் செய்தாலும் கோவை வடக்கு தொகுதியை குறிவைத்து அண்ணாமலை காய் நகர்த்தி வருகிறார். கோவை வடக்கு தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மட்டுமே செய்வேன் என அண்ணாமலை கூறியுள்ளதாக செய்திகள் கசிகின்றன.
பாஜக தேசிய தலைமை
இதை பாஜக தேசிய தலைமை ரசிக்கவில்லை. மாநில தலைமைப் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டபோதே அவருக்கு தேசிய அளவிலான கட்சிப் பொறுப்பு அல்லது மத்திய அமைச்சரவையில் இடம் என முக்கிய அங்கீகாரம் கிடைக்கும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். இவை எதுவுமே நடக்காததால் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள்.
நயினார் நாகேந்திரன்
இந்த நிலையில் இந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை விரும்பும் தொகுதியையும் ஒதுக்க பாஜக தலைமை முன்வராவிட்டால் தாமரை கட்சியிலிருந்து தாவுவதற்கு தயாராக இருப்பதாகவும் பகீர் கிளப்புகிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள். பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழக பாஜகவில் அதிருப்தி அலைகள் வீசிக்கொண்டு தான் இருக்கின்றன.
பாஜகவினர் அதிருப்தி
இந்த நிலையில் பாஜகவின் தமிழக பொருளாளர் எஸ்ஆர் சேகர் இது எட்டப்பன்களின் காலம் என்றும், காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினி சொன்ன டயலாக்கை தமிழக பாஜக செயலர் வினோத் செல்வமும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருப்பது தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசலையும் அதிருத்தியையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
பாஜகவுக்கு சிக்கல்
அண்ணாமலையின் அதிருப்தியால் தான் இன்னும் தமிழகத்தில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறது பாஜக தேசிய தலைமை. இந்த தாமதம் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிர்மறை விளைவியே ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய்.. திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து!













Click it and Unblock the Notifications