பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம்
சென்னை: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகிய புதிய கட்சியை தொடங்க போகும் நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?

அமித் ஷாவின் அனுமதியுடன்,
மோடியின் ஆசீர்வாதத்துடன்,
BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி. பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம்.
கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா?
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான "Plan B" ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது
தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது.
இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள்.
முகமூடி மாறலாம். ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம். ஆர்எஸ்எஸ் பின்புலத்தில், தமிழகத்திற்கான பிளான் பி தயார். ஜாக்கிரதையாக இருங்கள். (Plan B is ready for Tamilnadu. RSS behind it . Beware of them.) இவ்வாறு மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பாஜகவில் இருந்து தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதத்தை டெல்லியில் தேசிய தலைவர் நிதின் நபினிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து இன்றைய தினம் இந்த ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக தேசிய தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அண்ணாமலை தனது ராஜினாமாவின் போது தமிழக பாஜக தலைவர்கள் சிலர் தன்னை புறக்கணித்ததாக தெரிவித்திருந்தாராம். அவர் 5 பக்க விலகல் கடிதத்தை கொடுத்திருந்தார்.
அண்ணாமலையை பாஜகவில் தக்க வைக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் அவர் சமாதானம் ஆகவில்லை. பாஜக முயற்சி தோல்வியில் முடிந்தது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் இன்றைய தினம் அண்ணாமலை புதிய கட்சியை அறிவிக்க போவதாக சொல்லப்படுகிறது. எனவே அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறினாலும் அவர் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் இருப்பதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications