பழியை தூக்கி கொங்கு மண்டலத்தின் மீது போடுவதா? அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜோதிமணி ஆவேசம்!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரம் தாழ்ந்து, அநாகரிகமான முறையில் ஊடகவியலாளரை விமர்சித்து விட்டு, பழியை தூக்கி கொங்கு மண்டல வட்டார வழக்கின் மீது போடுவது கடுமையான கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அருவருக்கத்தக்க வகையில் கொச்சையான வார்த்தைகளால் ஊடகவியலாளர் குறித்து பேசியது பெரும் பரபரப்புக்கு உள்ளானது. அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், தான் கொங்கு வட்டார வழக்கில் தான் பேசியதாகவும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தான் இழிவாகப் பேசியதை வட்டார வழக்கு எனக் கூறி நியாயப்படுத்த முயற்சிப்பதாக அண்ணாமலைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கொங்கு மண்ணும், மக்களும் மரியாதைக்குப் பெயர்பெற்றவர்கள். ஒருவரை ஒருமையில் அழைக்காமல் மரியாதையோடு அழைக்கும் வழக்கம் உள்ளவர்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரம் தாழ்ந்து, அநாகரிகமான முறையில் ஊடகவியலாளரை விமர்சித்து விட்டு, பழியை தூக்கி கொங்கு மண்டல வட்டார வழக்கின் மீது போடுவது கடுமையான கண்டனத்திற்குரியதும், கொங்கு மண்டல மக்களை அவமதிப்பதுமாகும். அநாகரிகமான, அறுவறுக்கத்தக்க அரசியலையே தனது அடையாளமாக வைத்திருக்கும் அண்ணாமலை ஊடகவியலாளர்களிடமும், கொங்கு மண்டல மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications