Power னா என்ன?.. எனக்கு எப்படி கிடைத்தது?.. "குழந்தைகளுக்கு" ஆன்லைன் கிளாஸ் எடுத்த அன்னபூரணி!
சென்னை: ஆன்மீகம் என்றால் என்ன, தனக்கு எப்படி சக்தி கிடைத்தது என்பது குறித்து காணொலியில் பக்தர்களுடன் பேசிய வீடியோவை தற்போது பேஸ்புக்கில் அன்னபூரணி வெளியிட்டுள்ளார்.
Recommended Video
ஆதிபராசக்தியின் அவதாரமாக அவரது பக்தர்களால் கருதப்படும் அன்னபூரணி அரசு அம்மா, இயற்கை ஒளி அறக்கட்டளை மூலம் கடந்த 2020 நவம்பர் 20 ஆம் தேதி பேசிய காணொலி காட்சி அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஆன்லைன் மூலம் வரும் அவர் அனைவருக்கும் வணக்கம் என்கிறார். அதற்கு ஆன்லைனில் இருப்பவர்கள் வணக்கம் குருவே என்கிறார்கள். அன்னபூரணி தனது பேச்சை தொடர்கிறார். எனது இயற்கை ஒளி வீடியோவை நேரில் பார்ப்பவர்கள் எனது உடையை பார்த்துவிட்டு நான் ஆன்மீகவாதியா என கேள்வி எழுப்புகிறார்கள். ஆன்மீகத்திற்கு எனக்கு சம்பந்தமில்லாத மாதிரி இருப்பதாக கேட்கிறீர்கள்.

யார் அன்னபூரணி
என்னால் ஒவ்வொருத்தருக்கும் விளக்க முடியாது. இப்போது சொல்கிறேன் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் என்பது யதார்த்தம், ஆன்மீகத்திற்கும் வெளி வேஷத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஆன்மீகம் முழுக்க முழுக்க உள்தன்மை சார்ந்தது. வெளிவேஷத்தை பார்த்துவிட்டு அதுதான் ஆன்மீகம் என அடிமையாகியுள்ளீர்கள். அதனால்தான் உங்களுக்கு இந்த சந்தேகம் வருகிறது.

ஆதிபராசக்தி அவதாரமா
இயற்கை என்றால் என்ன, இறைவன் என்றால் என்ன, தன்னை எப்படி உணர வேண்டும், இயற்கையை எப்படி உணர வேண்டும் என நான் பேசுவதை உள்வாங்குங்கள். ஆன்மீகவாதி எப்படி இருக்க வேண்டும் என லிஸ்ட் போட்டு வைத்திருப்பீர்கள், அதற்கு பொருந்தும்படி வெளிவேஷம் போட்டுக் கொண்டு இருப்பவர்கள் உங்களுடைய உள்தன்மையை மாற்றி, உங்களுக்கு ஆன்மீக அனுபவங்களை கொடுத்து, உங்களுடைய வாழ்க்கையை உருமாற்றி, உங்களை அந்த முழுமையில் நிலை பெற வைக்க முடிகிறதா என சொல்லுங்கள்.

ஆன்மீகம் என்றால் என்ன?
வெளிவேஷம் போட்டுக் கொண்டு ஆன்மீகம் பற்றித்தானே பேசுகிறார்கள். அதனால் என்ன பயனடைந்தீர்கள். வெளிவேஷம், வெளி அடையாளங்கள், நடிப்பு அத்தனையையும் தூக்கி வீசிவிட்டு நீங்கள் நீங்களாக இருப்பதுதான் ஆன்மீகம். இயற்கை ஒளி உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்களை கொடுத்தது, எப்படி உணர வைத்தது, எப்படி நிலை பெற வைத்தது என்பதை பாருங்கள். நான் என்னுடைய இயல்பில் இயற்கை கொடுத்த வாழ்க்கையை அனுபவித்து கொண்டாடி கிட்டு இயற்கை கொடுத்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.

குருவை ஆராயாதீர்கள்
நான் யாருக்காவும் என்னை மாற்றிக் கொண்டு வெளி வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை. சத்தியம் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாது. ஆன்மீகம் என்றால் என்னனே தெரியாமல் ஆன்மீகவாதியாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் நான் என்ன பேசுகிறேன் என்பதை உள் வாங்காமல் எனது வெளிதோற்றத்தை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குருவின் வெளிதோற்றத்தை ஆராய்ச்சி செய்பவர்கள் ஆன்மீகத்திற்கு தகுதியானவர்கள் இல்லை.

அன்னபூரணி
என்னிடம் பேசும்போதே ஒருவருக்கு மாற்றம் வருகிறது. உடனே உங்களுக்கு இந்த பவர் எப்படி வந்தது என கேட்கிறார். பவர் கிடைக்க நான் எதையும் செய்யவில்லை. இயற்கை செயல்படுகிறது. அதற்கு நான் ஒத்துழைக்கிறேன். உடல் இரண்டாக இருந்தாலும் உயிர் ஒன்றாக தான் நானும் அரசுவும் இருந்தோம். பின்னர் இயற்கையே எங்களை ஓர் உயிராக்கியது. எங்களுக்கு இதற்காகவே இந்த பிறவி தரப்பட்டது. இயற்கையை அறிவால் ஆராய்ச்சி செய்ய முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும் என அந்த வீடியோவில் அன்னபூரணி பேசியுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications