Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றுத்திறனாளிகள் முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்களா? மாரியப்பன் தந்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெங்கலம் வென்று தமிழகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலு இதுவரை 29 பதக்கங்களை பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வென்றுள்ள தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை முன்வைத்துள்ளார்.

பாரீஸில் நடந்த 2024 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று மறுபடியும் இந்தியாவை உலக அரங்கில் பேச வைத்திருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு. இதுவரை மூன்று முறை இவர் பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தமிழராக இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்பது நமக்குச் சிறப்பான செய்தி. தமிழ்நாட்டிலிருந்து 6 பேர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் 4 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். இன்னும் குறிப்பாகச் சொன்னால் இதில் 3 பேர் பெண்கள். இந்த மாற்றம் பலரை தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். எப்படியும் இந்த முறையும் மாரியப்பன் தங்க மகனாக தாயகம் திரும்புவார் என நம்பிக்கையில் விளையாட்டு ரசிகர்கள் இருந்தனர். ஆனால், ஜஸ்ட் மிஸ் என்ற அளவில் அவர் 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

mariyappan thangavelu

மாரியப்பன் பதக்கத்தைப் பெற்று நாடு திரும்பும் போது அவரது நடையில் லேசான ஒரு தடுமாற்றம் இருந்தது. அவர் இயல்பாக நடக்கக் கஷ்டப்படுவதைப் போன்ற ஒரு உணர்வு இருந்தது. அது குறித்துப் பேசிய மாரியப்பன், "இந்தப் போட்டிக்காக மாதக் கணக்கில் பயிற்சி மேற்கொண்டேன். எனது உடல் எடை முழுவதையும் ஒரு காலில்தான் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். மற்றொரு காலில் பாதம் இல்லை. அதனால் அந்தப் பகுதிக்கு உடல் எடையைக் கொண்டு போவது கடினம். அப்படியான காலத்தில் ஒரே காலில் சுமையை அதிகம் தாங்கி பயிற்சி செய்ததால், இரவு நேரங்களில் வலி பொறுக்காமல் பல நாட்கள் தூக்கத்தை இழந்திருக்கிறேன்" என்கிறார்.

வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலும் அளித்துள்ள ஒரு பேட்டியில், "இந்திய அளவில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாகப் பதக்கம் வென்றவன் நான்தான். தங்கம், வெள்ளி, வெங்கலம் என மூன்று விருதுகளை இதுவரை வென்றுள்ளேன். இந்த முறை எப்படியும் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் போனேன். ஆனால், அந்த நாட்டின் சீதோஷண நிலை எனக்கு ஒத்துவரவில்லை. ஆகவே எனக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் போனது. அதனால் முழு வேகத்துடன் போட்டியில் ஈடுபட முடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இருந்தாலும் வெங்கலம் வென்றேன். இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று முறை தொடர்ச்சியாகப் பதக்கம் வென்றவன் நான் மட்டும்தான். அதை நினைத்து ஆறுதல் பெற்றேன்.

இந்தப் போட்டியில் என்னுடன் மோதிய போட்டியாளர் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். நான் இந்தப் போட்டியில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி 3 ஆவது இடத்திற்கு வந்தேன். ஆனால், நான் இந்தியாவில் பயிற்சி செய்தபோதே 1.95 மீட்டர் அளவு உயரத்தைத் தாண்டி இருந்தேன். அந்த நாட்டின் பருவ சூழ்நிலை எனக்கு ஒத்துவராததால் உடல் சோர்வு ஏற்பட்டது. என்னோடு ஒப்பிடும்போது அவர் குறைவான உயரத்தைத் தாண்டியே தங்கத்தை வென்றுள்ளார். அதை நினைத்தால் மனம் சங்கடமாகவே இருக்கிறது.

mariyappan thangavelu

வழக்கமாக நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்குமான விதிமுறைகள் எல்லாம் ஒன்றுதான். எந்தவித வேறுபாடுகளும் கிடையாது. சிலர் என்ன நினைக்கிறார்கள் பாரா ஒலிம்பிக் என்றால் குறைத்து மதிப்பிடுகிறார்கள். பொதுவான ஒலிம்பிக் போட்டியில் ஒரு வீரர் ஒரு பதக்கத்தை வென்றாலே அவருக்குப் பல சலுகைகள் கிடைக்கின்றன. நாங்கள் இதுவரை 29 பதக்கங்களை வென்றுள்ளோம். அப்படி இருந்தும் பெரிய மாற்றங்கள் நடக்கவில்லை. டி20 உலகக் கோப்பையை வென்று நமது இந்திய அணி நாட்டுக்குத் திரும்பிய போது எந்தளவுக்குக் கூட்டம் கூடியது என்பதைப் பலரும் பார்த்தனர். நாங்கள் 29 பதக்கங்களை வென்றுள்ளோம். ஆனால், எங்களை வரவேற்க 300 பேர் வருகிறார்கள். இந்தளவுக்குத்தான் வரவேற்பு கிடைக்கிறது. ஸ்போர்ட்ஸ் என்றால் அனைத்தையும் சமமாகப் பார்க்கவேண்டும். அதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கக்கூடாது" என்று மன வருத்தத்துடன் சொல்கிறார்.

சமீபத்தில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு, ஒருவர் மாற்றுத்திறனாளியாகப் பிறப்பதற்கு அவர் முன் ஜென்மத்தில் செய்த பாவம்தான் காரணம் என்று பேசியது சர்ச்சையானது. அதைப் பற்றிய கேள்வி ஒன்று மாரியப்பனுடன் முன்வைக்கப்பட்டது. அதற்கு இடைமறித்துப் பதிலளித்த தமிழ்நாட்டின் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பொதுமேலாளர் கிருபாகர் ராஜா, "அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் ஒரு சவாலாகவே இதை முன்வைக்கிறேன். மாற்றுத்திறனாளி அல்லாத ஒருவர் மாரியப்பனைப் போல உயரம் தாட்டி காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். மாற்றுத்திறனாளி என்பதால் இவர்கள் ஏதோ சலுகையில் வெற்றி பெறவில்லை. திறமையால் வெற்றி பெறுகிறார்கள்.

ஒருமுறை இப்படித்தான் ஒரு விளையாட்டு வீரரை மாரியப்பனுடன் ஒரு ஹோட்டலில் தற்செயலாகச் சந்தித்தோம். அவர் என்னிடம் பேசிவிட்டு நகர்ந்தார். அப்போது மாரியப்பன் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வந்திருந்தார். நான் இவரை அந்த விளையாட்டு வீரருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவர் மாரியப்பனுக்கு ஒரு சம்பிரதாயமாகக் கூட வாழ்த்து சொல்லவில்லை. 'தெரியுமே' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இந்த நிலையை எல்லாம் மாற்ற வேண்டும்" என்கிறார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+