திடீர்ன்னு என்ன அவசியம்? திமுக பக்கம் அப்படியே சாயும் 2 பெரிய கட்சிகள்.. இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகள் திடீரென திமுகவிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாராட்டு தெரிவித்து வருகின்றன. திமுகவிற்கு எதிரான கூட்டணியில் இருந்த கட்சிகள் திடீரென ஆளும் தரப்பிற்கு ஆதரவு தருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கடந்த முறை சட்டசபை தேர்தலை அதிமுக - பாமக - பாஜக ஒன்றாக சந்தித்தன. தேமுதிக அமமுக கூட்டணியில் இருந்தது. அதற்கு முன்பாக லோக்சபா தேர்தலையொட்டி அதிமுக - பாமக - பாஜக - தேமுதிக ஒன்றாக சந்தித்தன.
பின்னர் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 9 மாவட்ட இடைத்தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியும் கூட முறிந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் தனித்து போட்டியிட்டு வரும் பாமக திடீரென திமுகவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. சமீபத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு செல்லாது. இதில் தமிழ்நாடு அரசு போதிய புள்ளி விவரங்களை வழங்கவில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் பாமக தலைமையிலான குழு சந்திப்பு நடத்தியது. இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை வெகுவாக பாராட்டினார்.

பாராட்டு
அதில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நன்றாகவே வாதம் வைத்தது. உச்ச நீதிமன்றத்தில் டாப் வழக்கறிஞர்களை வைத்துதான் வாதம் செய்தனர். தமிழ்நாடு அரசு இதில் சிறப்பாகவே செயல்பட்டது.வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பிரச்னையில், சட்ட வல்லுனர்களுடன் உரிய ஆலோசனை செய்வோம். நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் இதை பற்றி சட்டசபையில் நன்றாகத்தான் பேசி இருக்கிறார் என்று பாராட்டினார்.

தம்பி ஸ்டாலின்
பாமக நிறுவனர் ராமதாஸும், தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் நன்றாக வாதம் செய்ததாக பாராட்டினார். அதோடு தம்பி ஸ்டாலின் நினைத்தால் ஒரு வாரத்தில் முறையான புள்ளி விவரங்களை திரட்டி வன்னியர்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்க முடியும். சமூக நீதியை வழங்க முடியும் என்று.. ஸ்டாலினை தம்பி என்று அன்பாக அழைத்து இருந்தார். திமுகவுடன் இப்போது பாமக கொஞ்சம் நெருக்கம் காட்டி வரும் நிலையில்தான் தற்போது தேமுதிகவும் ஒரு பக்கம் பாஜகவை விமர்சனம் செய்துள்ளது.

பாஜக
திடீரென பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருக்கிறார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் நடந்த போராட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, இரண்டு மாடு.. இரண்டு ஆடு.. இரண்டு பெட்டி மட்டுமே வைத்து இருப்பதாக சொல்லும் நபர்களுக்கு எதற்கு , ஒய் பிரிவு பாதுகாப்பு.. அவர்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு தர வேண்டும்.. வேண்டுமென்றால்.. தைரியம் இருந்தால் பாதுகாப்பு வேண்டாம் என்று அவரால் மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடியுமா என்று அண்ணாமலையை விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

பிரேமலதா அவசியம் என்ன
திடீரென பாஜகவை பிரேமலதா விமர்சனம் செய்ய என்ன அவசியம் என்று கேள்வி எழுந்துள்ளது. தேமுதிக - பாஜக இடையே மோதல் பெரிதாக இல்லாத நிலையில்தான் அண்ணாமலையை பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார். ஒருவேளை திமுகவின் கவனத்தை ஈர்க்கும் வகையில்.. திமுக பக்கம் சாயும் வகையில் பிரேமலதா இப்படி பேசி இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் பாமக திமுகவிடம் நட்பாக செல்ல சிக்னல் கொடுக்கும் நிலையில்தான் பிரேமலதா இப்படி பேசி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications