அந்த "பச்சை வண்ணம்".. முஸ்லிம் பெண் சுரையா வடிவமைத்த "தேசிய கொடி".. ஆனால்.. பாஜகவுக்கு விசிக நறுக்
இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்து பாஜக அரசுக்கு வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: தேசிய கொடியில் உள்ள பச்சை வண்ணம் இசுலாமியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். இந்தியாவில் இன்றைக்கு இசுலாமியர்களின் பாதுகாப்பு நிலை என்ன? தேசப்பற்று கொடியில் இருக்கிறதா? செயல்படுத்துவதில் இருக்கிறதா? பாஜக விளக்குமா?" என்று விசிக கேள்வி எழுப்பி உள்ளது.
சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, லட்சக்கணக்கான மக்கள் தங்களது பிடியை மாற்றி வைத்துள்ளனர்.

கருணாநிதி
தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நினைவுகூறும் வகையில், நாட்டு மக்களுக்கு இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.. ஆனால், முதல்வர் ஸ்டாலின், பின்னணியில் இந்திய மூவர்ணக் கொடியுடன் கருணாநிதியின் போட்டோவை ட்விட்டரில் டி.பியாக வைத்து, மறைந்த தந்தை முதல்வர்களுக்கான கொடியேற்ற உரிமையை உறுதி செய்துள்ளார்... "மோடி என்ன சொன்னாரு, இவர் என்ன படத்தை வைத்திருக்கிறார் பாருங்க? இதில் கூட அரசியலா?" என்று அர்ஜுன் சம்பத் போன்றோர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், விசிக தேசிய கொடி குறித்து வேறு ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது.

பிங்கிலி
அதற்கு முன்பு தேசிய கொடி வடிவமைப்பு குறித்து ஒரு குட்டி அறிமுகம் பார்ப்போம்.. நம் நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்தியாவிற்கென்று தனியொரு அடையாளம் தர ஒரு கொடி தேவை என்று தலைவர்கள் அப்போது நினைத்தனர். அதனால், 1921-ல் "பிங்கலி வெங்கய்யா" என்ற பல்கலைக்கழக விரிவுரையாளர், காந்திக்கு ஒரு கொடியை டிசைன் செய்து தந்தார். ஆனால், அதில் இந்துக்களுக்கு சிவப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு பச்சை ஆகிய 2 முக்கிய மதங்களுடன் தொடர்புடைய நிறங்கள் இருந்தன... மேலும் மையத்தில், நூல் நூற்கும் ராட்டை இருந்தது.

பார்சிகள்
இதை பார்த்த காந்தி, அந்த தேசியக்கொடியில், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்சிகள் ஆகியோரை பிரதிபலிக்கும் விதமாக வெள்ளை நிறத்தை சேர்க்கும்படி சொல்லவும், அதன்படியே கொடி மாற்றி வடிவமைக்கப்பட்டது. பிறகு, 1931-ல் காங்கிரஸின் கொடிக்குழு, மூவர்ண கொடியில் சில மாற்றங்களை செய்தது.. அந்த குழுவில் இடம் பெற்றிருந்தவர்தான் சுரையை தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணி.. இவர் ஹைதாராபாத்தைச் சேர்ந்தவர்.. தேசியக் கொடியில் இருந்த அடர் சிவப்பு நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு நிறத்தையும், ராட்டைக்கு பதிலாக அசோகச்சக்கரத்தை இவர் வடிவமைத்தார்..

குங்குமம்
இதற்கு பிறகு, குங்குமம் நிறம் தைரியத்தையும், வெள்ளை அமைதியையும், பச்சை வளத்தையும் குறிக்கிறது என்று காங்கிரஸ் அறிவித்தது.. அதன்படிதான் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.. இப்போது விசிக எழுப்பும் கேள்வி என்னவென்றால், தேசிய கொடியில் உள்ள பச்சை நிறத்தை பற்றியதுதான்.. அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு பதிவிட்டுள்ள ட்வீட் இதுதான்:

சுரையா
"1947சூலை17அன்று தேசியக்கொடியில் உள்ள ராட்டையை எடுத்து விட்டு அசோகச்சக்கரத்தை பொருத்தி நேருவிடம் வழங்கினார் சுரையா தியாப்ஜி. அதற்கு முன் பிங்லி வெங்கையா தேசிய கொடியை வடிவமைத்தாலும் சுரையா தியாப்ஜியின் வடிவமைப்பே இறுதியானது. இந்து முஸ்லீம் ஒற்றுமையை மையப்படுத்தியே அசோகச் சக்கரம் பொருத்தப்பட்டது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரகடனப்படுத்துவதாக அமைந்தது.

பச்சை வண்ணம்
முஸ்லீம் சமூகத்தை சார்ந்த சுரையா தான் தேசியக்கொடியை வடிவமைத்தார். இன்று எல்லோருடைய வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என இந்திய தலைமை அமைச்சர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் வற்புறுத்துகின்றனர். ஆனால், தேசியக்கொடியின் உள்ளடக்கமே மதச்சார்பின்மை தான்... பச்சை வண்ணம் இசுலாமியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். இந்தியாவில் இன்றைக்கு இசுலாமியர்களின் பாதுகாப்பு நிலை என்ன? தேசப்பற்று கொடியில் இருக்கிறதா? செயல்படுத்துவதில் இருக்கிறதா? பாஜக விளக்குமா?" என்று கேட்டுள்ளார்.

பசுகடத்தல்
இதற்கு பலரும் திரண்டு வந்து ஆதரவும், எதிர்ப்புமாக பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. "சரியான கேள்வி.. இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், வன்முறைகளும் பெருகி வருகின்றன.. வடமாநிலங்களில் இவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது.. பசுவை கடத்தியதாக சொல்லி, அதனால் ஏற்படும் கொலைகள் அதிகம். சிறுபான்மையினர் மீதான தாக்குதலை இந்த அரசு நிறுத்தி பாதுகாப்பு தர வேண்டும் என்று வன்னியரசுக்கு ஆதரவான கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஷாநவாஸ்
அதேசமயம், நாட்டில் நிலையான வளர்ச்சி உருவாக வேண்டும். யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் வளர்ச்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற அர்த்தங்களை உணர்த்தும் வகையில்தான் பச்சை நிறம் தேசியக் கொடியை ஆக்கிரமித்துள்ளது, மற்றபடி தேசிய கொடிக்கு மதச்சாயம் பூசுவது தவறு என்று வன்னியரசுக்கு பதில் தந்து கொண்டிருக்கிறார்கள்.. மேலும் சிலர், "உங்கள் கட்சியில் ஷாநவாஸ் என்ற இசுலாமியர் வைத்துக்கொண்டு, பாதுகாப்பு இருக்கா? என்று மோடியிடம் கேட்டு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்றும் கேட்டு வருகிறார்கள்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications