அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்.. இந்த "பொருள்கள்" தாராளமாக கிடைக்குமாம்.. இனி ஹேப்பி
சென்னை: ரேஷன் அரிசி கோதுமை, மாநிலங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நிம்மதி தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
பருப்பு பதுக்கலை தடுக்கும்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது... நாடு முழுவதும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் கொள்முதல் குறைந்து விட்டதாலும், இருப்பு அளவுக்கு மீறி குறைந்துவிட்டதாலும், பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

என்ன காரணம்: எனவே, நுகர்வோர்களுக்கு எளிதாக பருப்பு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து மாநிலங்களில் இருக்கும் பருப்புகளின் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது.
மெட்ரிக் டன்: நேற்றுமுன்தினம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் இருப்பு நிலையை பற்றி, ஆய்வு செய்வதற்கான கூட்டம் நடத்தப்பட்டது.. அந்த கூட்டத்தில், வரும் அக்டோபர் 31ம் தேதி வரைக்கும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த விற்பனையாளர்களுக்கான பருப்பு இருப்பு வரம்பு 200 மெட்ரிக் டன் என்றும், சில்லறை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு 5 மெட்ரிக் டன்னாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், விற்பனையாளர்கள் அவ்வப்போது பருப்புகளின் இருப்பு நிலையை https://fcainfoweb.nic.in/psp என்கிற இணையதள பக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
வரத்து அதிகம்: அதுமட்டுமல்ல, கோதுமை தவிர திறந்த சந்தை விற்பனைத்திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.. இதற்கான அளவு பிறகு அறிவிக்கப்படும் என்கிறார்கள்.. ஆனால் அதேசமயம், தொடர்ந்து அதிகரித்து வரும் கோதுமையின் விலையை குறைக்க அரசு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பயனில்லாமல் உள்ளது.. எனவேதான், நிலைமையை கட்டுப்படுத்தவும், வரத்து அதிகரிக்கவும், இருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாம்.
திடீரென அரிசி, பருப்பு விநோயகத்தினை மாநிலங்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகவும் பொதுமக்கள் மத்தியில் கலக்கம் சூழ்ந்து கொண்டுள்ளது.. தமிழகத்தில் மட்டும், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வரும்நிலையில், ரேஷன்தாரர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா என்ற பீதியும் கிளம்பி உள்ளது.
முன்னுரிமை: ஆனால், மத்திய அரசு அறிவிப்பினால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள் அதிகாரிகள்.. தமிழகத்தில் மாதத்துக்கு 3.40 லட்சம் டன் அரிசி தேவையாக இருக்கிறது.. அதில், முன்னுரிமை தந்து, அந்தியோதயா பிரிவுகளுக்கு தேவைப்படும், 2 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு இலவசமாகவே வழங்கி வருகிறது..
இதைத்தவிர, கிலோ அரிசி, 8.30 ரூபாய் விலையில், 93,000 டன் தரப்படுகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, மத்திய அரசின் ஒப்பந்தத்தின் கீழ், நுகர்பொருள் வாணிப கழகமானது, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை, அரிசியாக மாற்றி, தமிழகத்திற்கான ஒதுக்கீட்டில் ஈடு செய்து வருகிறது.
நிம்மதி பெருமூச்சு: அந்தவகையில், இந்த சீசனில் விவசாயிகளிடமிருந்து, 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. இப்போதைக்கு 7.50 லட்சம் டன் அரிசி இருப்பு இருக்கிறது.. இது வரும் ஆகஸ்ட் வரை போதுமானதாக உள்ளது.. அதனால், மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை நிறுத்தினாலும்கூட, தமிழக ரேஷன் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள்.. இந்த தகவலானது, ரேஷன் குடும்பதாரர்களுக்கு நிம்மதி பெருமூச்சை தந்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications